Filed Under:  இந்தியா

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்” பாஜக தேர்தல் வாக்குறுதி

19th January 2012   ·   0 Comments

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்” பாஜக தேர்தல் வாக்குறுதி

பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.
மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. பாஜக தலைவர்கள் மாநிலம் முழுவதிலும் சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க மேலிட பொறுப்பாளரும்,தேசிய செயலாளருமான தவார்சந்த் கெலாட் டேராடூனில் நடந்த கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதில், உத்தரகாண்டில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திரத்தை அதிக அளவில் சேகரித்து அதிலிருந்து ‘ஆர்க்’ என்ற ஜூஸ் தயாரித்து அதை புற்று நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாட்டு மூத்திரத்திலிருந்து காது, கண் நோய்களுக்கான மருந்து தயாரிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.