Filed Under:  தமிழ் நாடு

பல்கலைக் கழக பணிகளில் சுணக்கம்

30th November 2011   ·   0 Comments

துணைவேந்தர் பதவி காலியிடம்:
பல்கலைக் கழக பணிகளில் சுணக்கம்
அரசு கவனம் செலுத்த பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை

மதுரை,
பல்கலைகளில் துணை வேந்தர்களை நியமிக்க, தமிழக அரசு உயர் கல்வித் துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்கள், கல்வியாளர் கள் விரும்புகின்றனர்.
மதுரை காமராஜ் பல் கலையில் கடந்த ஏப்ரல் முதல் துணைவேந்தர் பணி யிடம் காலியாகவே உள் ளது. துணைவேந்தர் கற் பககுமாரவேல் ஓய்வுக்குப் பின், யாரும் அப்பதவிக்கு நியமிக்கப்படவில்லை.
இப்பதவிக்கு செனட், சிண்டிகேட்டில் இருந்து தலா ஒருவர், ஒரு கவர்னர் நியமன உறுப்பினரைக் கொண்ட மூன்றுபேர் கொண்ட கமிட்டி, மூன்று பேரை தேர்வு செய்யும். அவர்களில் ஒருவரை பல்கலையின் வேந்தரான கவர்னர் தேர்வு செய்வார். இந்த குழுவின் ஆயுட்கா லம் 6 மாதமே.
இந்நிலையில், செனட் அமைப்பில் பட்டதாரி தொகுதி உறுப்பினர் பதவி காலியாக இருப்பதால், அதுபற்றிய வழக்கு நீதிமன் றத்தில் நிலுவையில் உள் ளது. இதனால், துணை வேந்தர் பதவி நியமனம் தள்ளிக் கொண்டே போனது. இருந்தபோதி லும், குழு அமைக்கப்பட்டு ஆறுமாதங்களை கடந்து விட்டதால், அது தானா கவே செயலிழந்துவிடும்.
இப்படி பல காரணங் களால் துணைவேந்தர் பத விக்கு யாரும் நியமிக்கப்ப டாமல் காலியாகவே உள் ளது. தற்போது, உயர்கல் வித்துறை செயலாளரை அமைப்பாளராகக் கொண்ட சிண்டிகேட் அமைப்பு, பல்கலையை நிர் வகித்து வருகிறது.
பல்கலையில் எந்த வொரு முடிவு எடுப்பதற் கும் சென்னையில் உள்ள செயலாளரை நாடும் நிலை யில் பல்கலை உள்ளது. இதனால், பல்கலையின் செயல்பாடுகளில் சுணக் கம் ஏற்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டில் புதிய கல் லூரிகள், பழைய கல்லூரி களின் புதிய பாடப் பிரிவு களுக்கு அங்கீகாரம் வழங் குதலில் தாமதமாகின்றன.
செனட் கூட்டம், அகா டமி கவுன்சில், சிண்டிகேட் கூட்டம் நடந்து பலமாதங் களாகி விட்டன. மதுரை காமராஜ் பல்கலை, “”நாக்’ அமைப்பின் ஐந்தாண்டுக் கான (அக்ரிடிட்டேஷன்) அங்கீகாரத்தை பெற்றது. இந்த அங்கீகார ஆண்டு முடிந்துவிட்டதால், தொடர்ந்து அங்கீகாரத் திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான வசதி கள், ஆவணங்களை தயார் படுத்தும் பணிகள், துணை வேந்தர் இல்லாமல் தாமதமாகின்றன.
பல்கலையில் துணை வேந்தர், பதிவாளர், ஒரு டீன் பணியிடத்தை, தேர் வுக் கட்டுப்பாட்டு அலுவ லர் ஒருவரே கவனித்து வருகிறார். இதனால் கூடு தல் பணிப்பளுவுடன் அவர் செயல்பட வேண்டி யுள்ளது.
இதுதவிர யு.ஜி.சி., மூலம் பல்கலைக்கு பல வகை களில் நிதியுதவி பெற வேண்டியுள்ளது.
தமிழக அரசு உயர்கல் வித் துறையில் கூடுதல் கவனம் செலுத்தாவிட் டால், பல்கலைகளின் நிலை பரிதாப நிலைக்கு தள்ளப்படுவது உறுதி. தற் போதுள்ள நிலையில் மதுரை காமராஜ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை போன் றவற்றில் பல மாதங்களாக துணைவேந்தர் பணியிடம் காலியாகவே உள்ளது. இனி புதிய தேர்வுக்குழு அமைத்து, அவை கூடி தகுதியானவர்களை தேர்ந் தெடுத்து, கவர்னருக்கு பரிந் துரைக்க குறைந்தது 2 மாதங்களாவது தேவைப் படும். அதன் பின், கவர்னர் துணைவேந்தரை நியமிக்க வேண்டும். இது மேலும் தள்ளிப் போனால், பல் கலையின் செயல்பாடு முழுமையாக முடக்கப் படும் என்பது உறுதி.

-தகவல்
க.கா.செ.
கடையநல்லூர்

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.