பிப்ரவரி 19, சிங்கப்பூரில் பெற்றோர்களுக்கான இலவச பயிற்சி முகாம்
17th February 2012 · 0 Comments
பிப்ரவரி 19, சிங்கப்பூரில் பெற்றோர்களுக்கான இலவச பயிற்சி முகாம்
சிங்கப்பூர் : சிங்கப்பூர் இந்திய முன்னேற்ற சங்கம் ( Singapore Indain Development Association – SINDA – சிண்டா ) மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர் கிளை ஆகியவை இணைந்து 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சிங்கப்பூர் பியீட்டி சாலையில் அமைந்துள்ள சிண்டா தலைமையக மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் பெற்றோர்களுக்கான இலவச பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது என முன்னாள் மாணவர் சங்க தலைவர் முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்த விளக்கவுரை இடம்பெறும்.
இந்நிகழ்வில் கணிதத்துறை பேராசிரியர் பி எம். ஏ. அமானுல்லா கருத்துரை வழங்குகிறார்.
மேலதிக விபரங்களுக்கு 63981020 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் : contact@jmcalumni.org.sg
www.sinda.org.sg
www.jmcalumni.org.sg
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!
- ஐ.நா.வின் யுனெஸ்கோ ஆலோசகராக முஹம்மது ஜின்னா !
- ரஷ்ய விமான விபத்து-50 பேர் பலி!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


