பிப்ரவரி 25, குவைத்தில் ரத்ததான முகாம்
18th February 2012 · 0 Comments
குவைத் : குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் சார்பில் குவைத் தேசிய தினத்தினை முன்னிட்டு 25.02.2012 சனிக்கிழமை காலை 8 மணிக்கு குவைத் ஜாப்ரியா மத்திய ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது என மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் காரைக்கால் எஸ். எம். ஆரிஃப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
ரத்ததான முகாமினை குவைத்திற்கான இந்திய தூதர் ஸ்ரீ சதீஷ் சந்த் மேத்தா தொடங்கி வைக்கிறார். ஃபிமா அமைப்பின் தலைவர் முக்தார் மஃரூப் வாழ்த்துரை வழங்குகிறார்.
உயிர்காக்கும் இத்தகைய அறப்பணிக்கு ரத்ததானம் வழங்கி ஈருலக நன்மைகளைப் பெற்றிட குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை கேட்டுக் கொள்கிறது.
மேலதிக விபரங்களுக்கு ;
அலைபேசி எண்கள் : 94420919 / 97879749
மின்னஞ்சல் : smamaricar@yahoo.co.in
தகவல்:முதுவை ஹிதாயத்
தொடர்புடைய செய்திகள்
- மே 18 துபாயில் இலவச சட்ட உதவி முகாம்
- ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை: அதிர்ச்சி தகவல்
- தமிழக வாலிபர் சவுதியில் சுட்டுக்கொலை
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


