பிறர் சொல்லியபடி முஸ்லிம்கள் வாழ முடியாது:பாரம்பரிய தலைவர்கள் காட்டிய வழியில்தான் செல்ல முடியும்- கே.எம்.கே
31st December 2011 · 0 Comments
பிறர் சொல்லியபடி முஸ்லிம்கள் வாழ முடியாது:பாரம்பரிய தலைவர்கள் காட்டிய வழியில்தான் செல்ல முடியும் – நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கே.எம்.கே. பேச்சு
முஸ்லிம்கள் எப்படி இணைந்து வாழவேண்டும் என்பதை பிறர் சொல்லியபடி வாழ
முடியாது. பாரம்பரிய முஸ்லிம் தலைவர்கள் காட்டிய வழியில்தான் நாங்கள்
செல்ல முடியும்; வாழவும் முடியும்.
எழுத்து இடியாகவும், மின்ன லாகவும் இருந்து விட்டால் போதாது; அது
மழையாகவும் கொட்ட வேண்டும்; கொட்டுகிற மழை கூட, திருக்குர்ஆன் கூறுவது
போல், கட்டாந்தரையில் புல் பூண்டு செழித்துப் பச்சைப் பசேல் என்று அழகு
பிறக்கும் வகையிலான மழையாக இருக்க வேண்டும், என்று ஆளூர் ஷா நாவஸ்
எழுதியுள்ள “குருதியில் நனையும் காலம்�� நூல் வெளி யீட்டு விழாவில்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்
மொகிதீன் குறிப்பிட்டார்.
நூல் வெளியீட்டு விழா
சென்னை அண்ணா சாலை தேவநேய பாவணர் நூலக வளா கத்தில் நடந்த இந்த விழாவுக்கு
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்கி னார். உயிர்மை
பதிப்பகம் வெளி யிட்டுள்ள குருதியில் நனையும் காலம் என்ற நூலை விடுதலை
சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நூலை வெளியிட்டு
சிறப்புரையாற்றி னார்.
மனுஷ்யபுத்திரன், களந்தை பீர் முஹம்மது, கீற்று ரமேஷ், ஆண்டனி, ஜனநாதன்,
கே.டி. ஷரீப், அமீர் அப்பாஸ் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். ஆளூர்
ஷா நவாஸ் ஏற்புரை வழங்கினார்.
பேராசிரியர் பேச்சு
இவ்விழாவில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர்
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்ட தாவது:
குருதியில் நனையும் காலம் என்னும் இந்தக் கட்டுரையைத் தொகுத்துள்ள
நூலாசிரியர் துடிப்பு மிக்க சிந்தையாளர்; சமூக கண்ணோட்டத்தில் எந்தவொரு
பிரச்சினையையும் நோக்குபவர்; தமிழக முஸ்லிம் கள் மத்தியில் புதிய
எழுச்சியும், வேகமும், அரசியல் விழிப்பும் தோன்ற வேண்டுமென விரும்பு வர்
என்பது தெளிவாகிறது.
நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், இயக்கங்கள், சமூக அமைப்புகள்,
எழுத்துலக அறிஞர்கள் பலர் பற்றி நூலாசிரி யர் துணிச்சலான கருத்துக் களை
சொல்லி இருக்கிறார்.
ஆசிரியரின் கருத்துக் களை எல்லாரும் ஏற்பார்களா இல்லையா என்பது வேறு விஷ
யம். எதையும் மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாகச் சொல்வ தற்கு ஒரு தனிவகை
துணிச்சல் வேண்டும். அது இவரிடம் இருக்கிறது.
பேசியவர்களின் கருத்து
இங்கே உரையாற்றியவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும்,
முஸ்லிம் சமுதாயம் பற்றியும், பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொன்
றுக்கும் விளக்கம் சொல்ல மணிக்கணக்கில் நேரம் வேண்டும்.
இன்றைய முஸ்லிம்களுக்கு இந்துத்துவம் ஓர் ஆபத்து; இஸ்லாமிய அடிப்படை
வாதம் மற்றொன்று என்றார் ஒருவர்.
முஸ்லிம்கள் ஆன்மீகத்தில் இருந்து வெளிப்பட்டு அன்றாட அரசியலுக்குள் வர
வேண்டும் என்றார் ஒருவர்.
அரசியல் அறியாமையில் மூழ்கியுள்ள முஸ்லிம்கள் அரசி யல் வேறு; மதம் வேறு
என்று தெளிவு பெற வேண்டும் என்றார் இன்னொருவர்.
முஸ்லிம்கள் தனிமைப் பட்டுக் கிடக்காமல் மெயின் ஸ்ட்ரீமுக்க-பொது மையத்
துக்கு வர வேண்டும் என்றார் மற்றொருவர்.
சினிமா துறையில் முஸ்லிம் களுக்கும் தலித்துகளுக்கும் `லாபி�கள் இல்லாமல்
இருப்பதை முஸ்லிம்கள் நிரப்ப வேண்டும் என்றார் ஒரு பேச்சாளர்.
சோவியத் யூனியன் முஸ்லிம்களுக்குப் பாதுகாப் பாக இருந்தது. இன்றைக்கு
முஸ்லிம்கள் தலித்துகள் இடது சாரிகள் ஒன்றிணைந்து இந்திய அரசியலை வழி
நடத்த வேண் டும் என்று இன்னொருவர் கூறினார்.
இங்கே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எல்லாவற்றுக்கும் தகுந்த விளக்கங்கள்
உள்ளன. ஆனால் மூன்று செய்திகளை மட்டும் இங்கே முன்வைக் கிறேன். முஸ்லிம்
என்பவர்கள் யார்?
முதலில், முஸ்லிம்கள் என் பவர்கள் யார் என்பதைப் புரிந் தாக வேண்டும்.
சுவர்க்கம், நரகம், உலகம், தர்மம், சட்டம் எல் லாமும் அடங்கிய இஸ்லாமிய
மார்க்கம் உலகளாவியது; ஏன், பிரபஞ்ச ரீதியிலானது. அதை ஏற்றுள்ளவர்கள்
முஸ்லிம்கள். உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்று நம்பி வாழும்
முஸ்லிம்கள், தமிழகம்தான் எங்கள் குடும்பம்; இந்தியாதான் எங்கள் சமுதாயம்
என்று நம்பி வாழும் மக்களுடன் இணைந்து வாழ நினைக்கும் போது பலப்பல
சிக்கல்களுக்கும் சங்கடங்களுக்கும் முஸ்லிம்கள் ஆளாகிறார்கள். தமிழ்
தேசியத் துடனும் இந்திய தேசியத்துட னும் முஸ்லிம்கள் எப்படி இணைந்து
செல்ல வேண்டும் என்பதை பிறர் சொல்லியபடி முஸ்லிம்கள் வாழ முடியாது;
முஸ்லிம்களின் தலைவர்கள் காலங்காலமாக எங்களுக்கு எப்படி நடந்து கொள்ள
வேண் டும் என்று சொல்லியிருக்கிறார் களோ, அதன்படிதான் நூல்கள் செல்ல
முடியும்; வாழ முடியும்.
இரண்டாவதாக, சோவியத் யூனியன் முஸ்லிம்களைப் பாது காத்தது என்று இங்கே
பேசப் பட்டது. சோவியத் யூனியன் உடைந்து சிதறிப் போனதற்குக் காரணமே அது
அழிக்க முயன் றுதான் சோவியத் பிரதேசங் களில் உள்ள பள்ளிவாசல்கள், அரசு
அலுவலகங்களாக மாற் றப்பட்டன; மார்க்கப் பள்ளிக் கூடங்களான மதரஸாக்கள்
அரசு பணியாளர்களுக்குரிய தாக மாற்றப்பட்டன. தொழுகை நடத்தவிட வில்லை;
குர்ஆன் ஓத விடவில்லை; மார்க்க அறி ஞர்கள் தலைமறைவாகி, கேட கோம்புகள்
போல் அண்டர் கிர வுண்டு அமைத்து அங்கே தொழுகையும், மார்க்க கல்வி
போதனையும் நடத்தினார்கள். முஸ்லிம்களை அழிக்க முயன்ற சோவியத் ரஷ்யா
அழிந்தது என்பதுhன் வரலாறு.
மூன்றாவதாக, அரசியலில் முஸ்லிம்களுக்குச் சில அறிவு ரைகள் இங்கே
தரப்பட்டன. இருபத்தி ஐந்து ஆண்டு களுக்கு முன்னர் முஸ்லிம் லீக் சட்டமன்ற
உறுப்பினராக இருந்த ஷாகுல் ஹமீது அவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தில்
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிரான அமைப்பு ஒன்றை உரு வாக்குவதாக கூறி
எஸ்.எஸ்.எஸ். என்று அமைத் தார். சகோதர சமத்துவ சங்கம் என்பது விரிவு.
இதில் முஸ்லிம்களும் தாழ்த் தப்பட்டவர்களும் இணைந்து சகோதர சமத்துவ
சங்கம் உருவாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தலித்களை சகோதரர்கள் என்று சொல்லி
சங்கம் உருவாக்கியதைப் பார்த்த பிற சமுதாய மக்கள்-எந்த மக்களுடன் இங்கே
சில நண்பர்கள் கூறியதுபோல, அப்பு, மாமா, என்று உறவு கொண்டாடுகிறோமோ அந்த
மக்கள் எங்களைப் பார்த்துக் கேட்டார்கள்: முஸ்லிம்களுக்கு தலித்துகள்
மட்டும் சகோதர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு என்னவாக இருக்கிறோம்?
என்றார்கள். அதற்கு எங்களால் பதில் சொல்ல இயலவில்லை. அந்த எஸ்.எஸ்.எஸ்.
அமைப்பால் எத்தகைய குழப்பங்கள், கலவரங்கள் ஏற்பட்டன என்பது நீண்ட வரலாறு
ஆகும்.
முஸ்லிம் லீக் உறவு இந்திய ஜனநாயகத்தில் பல்வேறு கட்சிகளுடன் முஸ்லிம்
லீகினர் உறவு கொள்கிறோம். அந்த உறவு சாதி, மதம் பார்த்து அல்ல; பிற
கட்சிகளுடைய கொள்கைகள், திட்டங்கள் பார்த்துதான் அரசியல் உறவு
கொள்கிறோம். புதிய இளைஞர் எழுத்தாளர் கள் இன்றைக்கு நிறையப்பேர் வெளியே
வருகிறார்கள். எண் ணுவதையெல்லாம் எழுதிவிட முடியாது. பத்திரிகையாளர்
பற்றிய ஒரு பழமொழி உண்டு: “ஜாக் ஆஃப் ஆல் டிரேட்ஸ்; பட் மாஸ்டர் ஆஃப்
நன்ன்- எல்லா வற்றையும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டு, எதைப்பற்றி
யும் முழுமையாகத் தெரியாமல் இருப்பவன் பத்திரிகையாளன்�� என்பார்கள். அந்த
நிலையில் இருந்து மாறி, மற்றொரு கருத்தை மனதிற் கொள்ள வேண்டும். ஹn
நஒயீநசவ ளை டிநே றாடி மnடிறள அடிசந யனே அடிசந யbடிரவ டநளள யேன டநளள- ஒரு
விஷயத் தில் ஆழமான அறிவு பெறுவது தான் நிபுணத்துவம் என்பார்கள். அத்தகைய
நிபுணத்துவம் வளரும் எழுத்தாளர்களுக்கு ஏற்பட வேண்டும். எழுத்து மிக வும்
ஒன்று. அதன் மூலம் உருவாக்க வேண்டும். எழுத்து இடியாக, மின்னலாக இருக்
கலாம்; ஆனால் அது கொட்டும் மழையாக, திருக்குர்ஆன் கூறுவது போல
கட்டாந்தரையில் புல் பூண்டு செழித்துப் பச்சைப் பசேல் என்று அழகு
பிறக்கும் வகையிலான மழையாக இருக்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.
காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
கலந்து கொண்டோர்
இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் கமுதி
பஷீர், முஸ்லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை செயலாளர் மில்லத் இஸ்மாயீல்,
ரப்பானி அப்துல் குத்தூஸ், கவிஞர் ஷேக் மதார், மௌலவி மு.அ. ரஹ்மத்துல்லா
ஜமாலி, டாக்டர் ஹிமானா சயீத், அப்போலோ ஹனீபா, மௌலவி கனி ஜமாலி உள்ளிட்ட
சமூக பிரமுகர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
-thanks to Manichudar
*-க.கா.செ.*
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


