புகை பிடிக்க தடை
31st October 2011 · 0 Comments
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் “புகை’ பிடிக்க தடை விதிக்கப்பட்டது. “ஐ.எஸ்.ஓ., தரச்சான்று’ பெற்ற மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் சுகாதாரக்கேடு நிலவியது. பிளாட்பாரங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் இருந்தன. இதுகுறித்து “தினமலர்’ இதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதன் எதிரொலியாக கலெக்டர்சகாயம் உத்தரவிட்டதன் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சுகாதார வசதிகள் செய்யப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் கடைகளில் பீடி, சிகரெட் மற்றும் லாகிரி வஸ்துக்களை விற்பனை செய்யவும், “புகை’க்கவும் மாநகராட்சி கமிஷனர் நடராஜன் தடை விதித்தார்.
அங்கு புகைப்பவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். “புகை’ இல்லா பஸ் ஸ்டாண்டாக’ மாற்றியதை பயணிகள் வரவேற்றனர்.ஆரப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்டிலும் “புகை’க்க தடை பிறப்பிக்க மாநகராட்சி முன்வர வேண்டும்.
தகவல் : நல்லூரான்
தொடர்புடைய செய்திகள்
- புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
- ஹஜ் பயணத்திற்கு அரசு விமான கட்டண சலுகை வழங்குவதை மானியம் என்று சொல்வது அறியாமை:பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
- 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!
By Abu Aasima
Readers Comments (0)
Comments are closed.


