புரிதல்……புதிரானது-அபுஸாயிமா கடையநல்லூர்
31st January 2012 · 0 Comments
புரிதல்……புதிரானது
—————————-
பனித் துளியின் பரிசுத்தம் அறியா புல்வெளியாய்
நிலவின் ஒளிப்பெருமை அறியா மேகமாய்
தன்னை அசைத்திடும் காற்றை சாடிடும் மரமாய்
இறுதி வரை என்னைப் புரிந்து கொள்ளாமலே நீ…..
நாளை நடப்பதை நானறிந்தது போல்
என்மேலென்ன அப்படிக் கோபம் ….?
நனைந்த என் துவாலையும்
நாசூக்காய் உணர்த்தவில்லையோ
நம் பிரிவின் சோகம்……?
இனியேனும் நாமிருவரும்
கடலினில் சங்கமிக்கும்
நதிகளாய் பரிணாமம் அடைவோமா …?
இல்லை
மணித்துளியில் மறைந்திடும் நீர்த் திவலைகளாய் உடைவோமா…?
நட்புடன்
அபுஸாயிமா
தொடர்புடைய செய்திகள்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


