Filed Under:  படைப்புகள்

பெண் !

8th February 2012   ·   0 Comments

பெண் !

அன்பின் முதற்பெயர் பெண்
அறிவின் ஜோதி பெண் !

ஆண்களின் ஆதரவு பெண்
ஆதிக்கத்தின் ஆண்மை பெண் !

இன்பத்தின் இருப்பிடம் பெண்
இன்னல்களின் அமைவிடம் பெண் !

ஈதலின் முக்கியத்துவம் பெண்
ஈன்றலுக்குப் பெருமை பெண் !

உழைப்பின் உயர்வு பெண்
உன்னத பாசம் பெண் !

ஊன்றுகோலாய் காப்பவள் பெண்
ஊற்றுபோல் பாசமளிப்பவள் பெண் !

எட்டு அதிசயத்தின் முதன்மை பெண்
எட்டாத மனதின் ஏற்பிடம் பெண் !

ஏழ்மையின் எளிமை பெண்
ஏழ்வான் எதிரொலிக்கும் ஓசை பெண் !

ஐந்து பிரமிப்பின் அடைமொழி பெண்
ஐந்தாவது பெற்றாலும் அடக்கம் பெண் !

ஓன்று பத்தாய் சேமிப்பவள் பெண்
ஓன்றை பத்தாக்கி உவமமாக்குவதும் பெண் !

ஓயாது உழைப்பவள் பெண்
ஓங்குகின்ற கைகளின் பின் பெண் !

ஓளவையின் பரம்பரை பெண்
ஓளவையையும் கற்பிக்கின்றவள் பெண் !

தாய்மைக்கு ஏற்றவள் பெண்
தியாகத்தின் வடிவம் பெண் !

ஃ என்ற முடிவின் முதல் நிலையே பெண் ! …………
பெண் !………………….

-க.கா.செ.
கடையநல்லூர்

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.