போலீஸ் – முஸ்லிம்கள் மோதல் : டெல்லி பதற்றம்
17th February 2012 · 0 Comments
டெல்லியில் இஸ்ரேல் தூதரக அதிகாரி கார் மீது தீவிரவாதிகள் காந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
டெல்லி ஜமியா நகர் பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது விசா காலம் முடிந்த பிறகும் 6 ஈரான் நாட்டவர்கள் அங்கு தங்கி இருப்பது தெரிந்தது.
அவர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்கு ஜமியா நகர் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் விசாரணைக்கு பிடித்துள்ள 6 முஸ்லிம்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று ஜமியா நகர் பகுதி மக்கள் கூறினார்கள். ரேசன் கார்டுகளையும் காட்டினார்கள். ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்லிம்கள் 3 போலீஸ் உயர் அதிகாரிகளை சிறை பிடித்து வைத்துக் கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வானத்தை நோக்கி 2 ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதன் பிறகே சுமார் 500 பேர் கொண்ட கும்பலிடம் இருந்து 3 போலீஸ் உயர் அதிகாரிகளை மீட்க முடிந்தது.
ஜமியா நகரில் ஏற்பட்ட பதட்டம் குறித்து தகவல் அறிந்ததும் அதிரடிப்படை வீரர்கள் விரைந்தனர். அவர்கள் அங்கு அமைதியை ஏற்படுத்தினார்கள். இந்த சம்பவம் பற்றி விசாரித்த போலீஸ் உயர் அதிகாரிகள், சில போலீசார் மீது தவறு இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்: 5 வீரர்கள் சஸ்பெண்ட்
- “சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பியது பாப்புலர் ஃப்ரண்ட் புகார்!
- ஆ.ராசாவுக்கு ஜாமீன்… திகார் சிறையிலிருந்து விடுதலையாகிறார்!
By ASAN
Readers Comments (0)
Comments are closed.


