ரண நிலையம்..
29th November 2010 · 0 Comments
நொடிகளும் படிநுனியில்
அழுத்தம் கொடுத்த இதயம்;
அழமட்டுமே முடிந்தக் கண்கள்;
மனம் தந்த வலியால்
மயான அமைதிக்கொண்ட
விமான நிலையம்!
விட்டுப்பிரிய வந்திருக்கும்
திக்குத்தெரியா மக்கள்;
புரியாத மொழிகள்;
விழிகளால் பேசுவோம்;
வலி ஒன்றென்பதால்!
எத்தனை முறைப் பிரிந்தாலும்
அத்தனை முறையும்
அழுகிறேன்;
அழுவதற்கு வெட்கப்படத்
தேவையில்லா இடம்!
கனமான இதயத்தால்
இலகுவானது கைப்பெட்டி;
முரண்டுப்பிடித்த பாதமோ
நகர மறுக்கும்!
உன்னை விட்டு
விலக வெறுக்கும்!
சுற்றம் சூழ
கண்ணீர் மல்க
இதயம் விலக;
விட்டுப்பிரிகிறேன்
இறிதியாகத் தொட்டுச்செல்கிறேன்!
-யாசர் அரஃபாத்
தொடர்புடைய செய்திகள்
- பெண்கல்வி!
- இந்திய அரசியல் வரலாறு முஸ்லிம்களின் பக்கம் திரும்புகிறது!
- இறையருள் வேண்டிடுவோம்! – கவிஞர் இ.மு.முஹம்மது புகாரி,கடையநல்லூர்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


