Filed Under:  படைப்புகள்

விதவையின் தாலாட்டு

19th February 2012   ·   0 Comments

விதவையின் தாலாட்டு

கண்ணன் தந்த மன்னவனே
கண்ணுறங்கு தாலேலோ..
முந்தானை முகம் புதைத்து
மூடு கண்ணே தாலேலோ..
நாளை உந்தன் காலடியில்
நானிருப்பேன் தாலேலோ..
நல்லவனாய் நான் வளர்ப்பேன்
நம்பி தூங்கு தாலேலோ..

கோவில் குளம் தவமிருந்து
பேற்றெடுத்தார் என்னையடா..
அத்தானை கட்டி தந்து
அள்ளித்தந்தேன் உன்னையடா..
ஆலமரம் என்று நம்பி
கை பிடித்த உன் தந்தையடா..
ஆசைக்கென்று உன்னை தந்து
விட்டுச்சென்ற விந்தையடா..

சோலையென வாழ்வு என்று
சொந்தம் கொண்டு வந்தேனடா..
பட்ட மரமாக இன்று
பாலையிலே நின்றேனடா..
சொந்தங்கள் இருந்தும் என்னை
சோகம் வந்து வாட்டுதடா..
சொக்க தங்கம் நீ வளர்ந்தால்
சொர்க்கம் கண்ணில் தோன்றுமடா..

-செங்கோட்டையன்

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.