Filed Under:  தமிழ் நாடு

வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சல்யூட் அடித்து மரியாதையை செய்த போலீசார் கூண்டோடு மற்றம்!

31st July 2011   ·   0 Comments

நில மோசடி வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், மற்றும் அப்போது பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகள் என பலருக்கும் இப்போது ட்ரான்ஸ்பர் உத்தரவு பறந்து வந்து கொண்டுள்ளது.

 

வீரபாண்டி ஆறுமுகம் விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு வீட்டு சாப்பாட்டு கொடுத்தது, மற்றும் வீரபாண்டி ஆறுமுகத்தின் சில ஆதரவாளர்களை விசாரணையின் பொது பார்த்து பேச அனுமதித்தது போன்ற புகார்களால் கடந்த இரண்டு நாட்கள் முன்னர், சேலம் நகர் சட்டம் ஒழுங்கு, துணை ஆணையாளர் பாஸ்கரன் பரங்கி மலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக 29.07.2011 அன்று பதவியேற்ற சத்தியப்பிரியா தலைமயிலான அதிகாரிகள் தான் 30.07.2011 அன்று வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்துள்ளார்கள்.

விசாரணைக்கு வந்த போது வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சல்யூட் அடித்து மரியாதையை செய்த நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் அண்ணாதுரையும், அழகாபுரம் ஆய்வாளர் கண்ணனனும், 30.07.2011 அன்று ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டனர்.

விசாரணையின் போது வீரபாண்டி ஆறுமுகத்திடம் சரியான முறயில் விசாரணை செய்யவில்லை. முன்னாள் அமைச்சரிடம் இன்நாள் அமைச்சரை விடவும் அதிக பயத்துடன் விசாரணை நடத்தியுள்ளார் என்ற புகார்கள் சென்னைக்கு அனுப்பட்டதை தொடர்ந்து உதவி ஆணையாளர் பிச்சை, ஆய்வாளர்கள் சங்கமேஸ்வரன், சீனிவாசன் ஆகிய மூவரும் 30.07.2011 அன்று மதியம் மாற்று பணியிடம் ஒதுக்கப்படாமலேயே பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னர் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்த போது அவருக்கு விசுவாசமாக இருந்த இன்னும் பல அதிகாரிகளின் பெயர் பட்டியல் தாயார் செய்யப்படுகிறது, விரைவில் அவர்களுக்கும் பணிமாற்ற ஓலை வரலாம் என்கிறார்கள் சேலம் காவல்துறையினர்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.