Filed Under:  படைப்புகள்

வெளிநாட்டில் முடிவில்லா உழைப்பு உலர்ந்துபோன உறக்கம்…-ஹாஜா முஹைதீன்,கடையநல்லூர்

17th February 2012   ·   0 Comments

காலைநேரங்களில்தான்; பூக்கள் மலரும்
மாறாக என் மனம் பாரமாய் கணக்கிறது

தாமரை தண்ணீரீல் தளிர்கிறது என்றாலும்
என் தோழர்கள் வியர்வையில் அல்லவா
விளைகிறார்கள்

அள்ளிக் கொடுத்துவிட்டு பணத்தை
அயல்நாடுவந்து அயராது உழைத்து
சம்பளமாய் அள்ளிச் செல்லும் முடிவில்

முடிவில்லா உழைப்பு உலர்ந்துபோன உறக்கம்

உறக்கம் கலையும்முன் மீண்டும் ஓர்
அபாயக் குரலில் அலாரம்

சோர்வில் சொக்கிப் போனவர்களுக்கு
சொர்க்கம் உறக்கத்தில் மட்டும்தான்

அலாரம் அலறுகிறது அதுக்கு அதுமட்டும்தான் வேலை
உணர்வுகள் வந்தபின்னும் கண்கள் திறக்க மறுக்கிறது

ஆடுகளாகவும் மாடுகளாகவும் கூடைக்குள் கோழிகளாகவும்
அறுப்புக்கு கொண்டு போவதுபோல் அல்லவா
வாகனங்களில் என் தோழர்கள் வேலைக்கு
அழைக்க(அடைக்க)ப்பட்டுச் செல்வது

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் இது கடவுள் வாக்கு

கேட்டாலும் தண்டனை தட்டினாலும் தண்டனை இது என்கம்பேனி வாக்கு

ஊணர்ச்சிகள் இல்லையென்றால் உயிரில்லை ஆனால்

இங்குள்ளவர்களுக்கு உயிர்மட்டும்தான்
உணர்ச்சியென்றாலே பெரும் அலர்ஜி

புரட்சி எல்லாம் இங்கு மனச்சட்டிக்குள்
இறச்சிகளாக வேகவைக்கப்படுகிறது

அன்பனே… சிந்தனையால்…
கிணறு தோண்டினால் மட்டும் போதாது
பொதுநலமும் சில்லறையும் சிதற வேண்டும்

பாதைதோண்டுவதும் பசியில் வாடுவதும்
உன் தினசரி வேலையின் வேதமந்திரம்
உனக்கெங்கே வரப்போகிறது இந்த உலகில்
பிழைக்கும் தந்திரம்…

இங்கு நமக்கெல்லாம் சுதந்திரம்–ஏன் தெரியுமா
வாங்கிய கடனை கொடுக்கவும்
திரும்ப கடன் வாங்க மட்டும்தான்

காய்ந்த வயிறுடன் சாய்ந்து கிடக்கிறான்
இவன் பாதையோரங்களில்

பல்வகை உணவிருந்தும் பசியில் உறங்குகிறான்
அவன் நோயின் பஞ்சணையில்

வாழ்விலும் சாவிவிலும் துணை இருக்கும் மலரும்
உனக்கு துணையாகத்தான் காலைநேரங்களில்
தானாகவே பூக்கிறதோ

-ஹாஜா முஹைதீன்
கடையநல்லூர்

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.