தாங்குமா..! தாங்காது..!! தாங்காது..!!!
கண்ணியமிக்க ஊர், கல்வியாளர் நிறைந்த ஊர், கடமை மிக்க ஊர், கருணைமிக்க ஊர், தென்னகத்தின் தென் மதீனா.. என வல்லோரும் நல்லோரும் புகழ்ந்த, நானிலம் போற்றும் நல்லூர்.. நமது கடையநல்லூர்.!
ஆனால்.. இன்று எங்கே செல்கிறது.. கடையநல்லூர்..!!!!!
கடல் கடந்த நல்லூர் வாசிகளின்… இன்றைய கவலை, எங்கே செல்கிறது இந்த கடையநல்லூர்.
காலாச்சார சீர்கேட்டின் விளிம்பில் இன்று கடையநல்லூர். அனாச்சரியங்களும், அக்கிரமும் இன்று நல்லுரின் தெருக்களில்.. தீயவர்களும் கயவர்கூட்டமும்.. இஸ்லாம் எனும் ஜீவனின் உயிரை கறுவருக்கும் வேலையை செய்யும் தீயவர்களின் கூட்டமும். கந்து வட்டியும் விபச்சாரமும் இன்று வரிந்து கட்டிக்கொண்டு நல்லுர் வீதியில். கலாச்சார சீரழிவாக – ஒடிப்போகும் நம் வீட்டுப் பெண்கள். இரத்தம் கொதிக்கிறது இன்றைய நல்லூரின் நிலைமை நினைத்து. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த தவறுகளினால்.. (கேவலங்களினால்) இன்று தலைப்புச் செய்தியாகிருக்கிறது நமதூரின் பரிதாப நிலைமை.
அன்றைய நமதூர் தெருக்கோடியில் நின்று, பெண்ணை பார்த்து ஒருவன் கண்ணடித்தால்.. குடி மகன் முதுகில் அடிப்பான்… நாட்டமை விதித்த தண்டனையும்.. விழும் அடியின் வலியையும் தாங்காது அவன் ‘தங்காது..தாங்காது..!’ என் கதறிய அந்த குரல் …..
அன்றைய நல்லூர் தெருக்களில், ஒருவருக்கு ஒருவர், தகாத வார்த்தைகளால் திட்டி மொட்டை கடிதம் எழுத.. அந்த விசயம் ஊர்கூட்டத்திற்கு உடனே வர, அடி.., அடி.. அடிமேல் அடி விழ.. எழுதியவனுக்கு மொட்டை அடித்து…‘தாங்காது.. தாங்காது..!!’ என கத்தினாலும் தவறு செய்தவனுக்கு மொட்டை யடித்து தண்டனை தந்த அந்த சிறைத்த கத்திகள்….
பெண்கள் குடும்பத்தினரோடு திரையரங்கம் சென்றாலும்.. அது காலையில் தெரு அரங்கமாக மாறுமே..!! அப்படி தெருவரங்கினால் குனியவைக்கப்பட்டவர் வெட்கித் தலைகுனிந்து, ‘தாங்காது..! தாங்காது..!!’ என சத்தம் போட்டு பின் அவர் வேதனை பட்டதையும்.. கேவலப்பட்டதையும் வேடிக்கை பார்த்த அந்த பழைய நல்லூர் மக்கள்…
சிறு பெட்டிக் கடையில சில்லறை இருக்கும் கல்லா பெட்டியை அந்த செல்லப் பெட்டியை திருடியவர்களையும், உதவியவர்களையும்.. நல்லூரின் கிழக்குத் தெருக்களில் வரிசையாக கால் கடுக்க, தன்ஸ் கம்பிகளில்(மின் கம்பங்களில்) மணிக்கணக்காக கட்டி வைத்து பின் கூட்டதார் தந்த அந்த தண்டனையால் அவனும் அவன் குடும்பத்தாரும் கதறிய அந்த குரல்கள்…
இன்னும் எத்தனை எத்தனையோ கதறல்கள்.
என எல்லாமுமே. ஏன்.. இன்னும் அவர்கள் கட்டப்பட்ட அந்த கம்பங்கள் கூட மாறாலேயே.. அதற்குள் இன்றைய நாட்டாமைகளுக்கு குற்றமும் அதற்கு தர வேண்டிய தண்டனையும் மறந்துவிட்டதா…. அல்லது மறந்து போனார்களா…. நாட்டாண்மைகள் தந்த தண்டனையால், அநேக வருஷம் நமதூர் கட்டுக்கோப்பாக தானே இறுந்தது. இதன் மூலம் நமதூரின் கட்டுப்பாடும்.. முஸ்லிமான நம்மவர்களின் கண்ணியமும் காக்க பட்டது… இன்று அதைவிட மேலாக தவறுகள் நடக்கின்றனவே.., முன்பை விட குற்றங்களும்.. அனாச்சாரங்களும் அதிகரிக்கின்றனவே.. தலைமைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது?.
‘தாங்காது..! தங்காது..!!’ என கதறிய அந்த குரலையும்.. மொட்டையடித்த அந்த கத்தியையும், கட்டிவைக்கப்பட்ட தன்ஸ் கம்பிகளையும் மறந்துவிட்டார்களா?. இப்படி பட்ட தவறுகளுக்கெல்லாம் தண்டிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் இன்று நினைத்துப் பார்க்க கூட முடியாத கேவலமான இழி செயலையும் இன்று கை கட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இன்றைய குட்டிச்சுவாராகிப்போன நல்லூரின் நிலமையை கண்டு வேதனைப்படுகின்றனர்.
ஆரம்பத்திலேயே.. தவறு செய்தவர்களுக்கு, தவறு செய்தவர் பெண்ணாக இருப்பின், பெண்ணென்றும் பாராமல், அன்றே எல்லார் பார்க்கும் பொருட்டு, மற்றவர் கேட்டு செய்யாதிருக்கும் பொருட்டு.. குறைந்த பட்ச தண்டனையாவது தந்திருந்தால்.. மீண்டும், மீண்டும் நம் சகோதர சகோதரிகளின் வழிகேட்டை தவிர்த்திருக்க முடியும். தண்டனைகள் ஒரளவாவது கடுமையாக்கபட்டிருக்க வேண்டும்.
நல்லூரில் பிறந்துவிட்டால், கல்லுரி காலம் முடிந்தாலும், முடியாவிட்டாலும்.. வெளி நாடு தான், அதுவும் அரேபிய பாலைவனம் செல்லவேண்டும் என்பது கடமை யாகி விட்டது. நல்லது தான். வறுமையே வாழ்க்கை யாகிப்போன நம் முன்னோர்கள், அவர்களின் அந்த உழைப்பு தரும் கூலி.. வெறும் அன்றாட செலவுக்கே போதாது என்றிருந்த காலம்.. வெளிநாட்டுப் ரியால்-கள் பணமாக மாறிய போதுதான்.. அவர்களின் கஷ்டங்கள் மாறிப்போயின.. நாமும் கொஞ்சம் வளர்ந்திருக்கிறோம். அதே வழியில் இன்றும் கூட நாமும், நம் குடும்பம், நம் சகோதரி, நம் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் நலனுக்காக இன்றளவும்… தனித்திருந்து, கஷ்டப்பட்டு, இரண்டு அக்னி வெயிலையும் தாண்டி கொளுத்தும் வெயிலில், சுடுமணலில்… கூலி வேலை செய்து.. நாம் வாங்கும் சொற்ப ரியால்களை, பணமாக வீட்டுக்கு கொடுக்கிறோம். எல்லா வேதனைகளையும் தாங்கி கொண்டு. இன்றைய சூழலில் நம் குடும்பத்தை சுற்றி நடக்கும் அனாச்சரியங்களினால், அசிங்கங்களினால்.. ஏற்படும் பாதிப்பு.. நம்மை சார்ந்தவர்களையும் பாதித்துவிட்டால் என்ன செய்வது.. என்கிற கவலைதான் மேலோங்கி இருக்கிறது.
அன்றைய நல்லுரில், வட்டாரக் கூட்டம், தெருக்கூட்டம், ஊர் கூட்டம், பேருர்கூட்டம் என பல கூட்டங்களில், பெரும் பிரச்சைனைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. நாம் மீண்டும் ஒன்றினைய வேண்டும். இனிமேல் நடந்து முடிந்தது போல் ஒரு பெரும்தவறு தடுக்கப்படவேண்டும்… பெறும் தவறு மாத்திரம் அல்ல.. சிறு பிழை கூட நேராமல் நாம் கண்காணித்தாக வேண்டும். அது நம் கடமை.
துபாயிலிருந்து, கத்தரிலிருந்து, ஒமனிலிருந்து, அபுதாபிலிருந்து, குவைதிலிருந்து, சவுதிலிருந்து.. நம்மை போன்ற வர்கள்.. வெறும் கண்டனங்களை இ மெயில் மூலமாக தெருவித்தால் மட்டும் போதாது… இனிமேலாவது, இந்த விசயத்திலிருந்து ஒன்றிணைய வேண்டும். மீண்டும் மீண்டும், இதுபோன்ற பார்வேர்ட் மெயில்கள் அனுப்பி, நாம் கூடும் இடங்களில் வியாக்கியானம் செய்து, எதோ எங்கோ லெமுறியா கணடத்தில் நடக்கும் நிகழ்வாக பார்க்காமல், அதை தடுக்க.. இது போல் இனியும் ஒரு செய்தி வராமல் இருக்க.. இங்கிறுந்து நாம் ஆதரவு கொடுக்கவேண்டும். அதை செயல் முறையாக.. கட்டளையாக.. ஒங்கி ஒருமித்து செயல்படுத்துவது.. ஊர் பெரியவர்கள், ஜமாத்தார்கள் கையில் தான் இருக்கிறது.
தண்டனைகளை கடுமையாக்குங்கள். தவறு செய்பவர்கள், அல்லது செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட்டாக வேண்டும். இது மட்டும் போதாது. ஈமானையும்.. நேர்வழியையும், பெண்களுக்கும், வழிதவறும் ஆண்களுக்கும் கற்றுத்தரவேண்டும். எல்லாவற்றிடுக்கும் மேலாக நாம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வாழ்ந்து காட்டி தந்த ஈமான் எனும் இறையச்சம், எல்லா மனதிலும் பதிய வைத்திடவேண்டும். அதையே கடமையென கருதி நம் நல்லூரை, தென்னகத்தின் தென்மதீனாவை, கடையநல்லூரை கட்டுக்கோப்பான இஸ்லாமிய ஊராக மாற்றிடவேண்டும்.
அல்லாஹ் அதற்கு அருள் புரியட்டும். ஆமீன். ஆமீன்..!!
வா.க. தங்கள்
அல் – கோபரிலிருந்து..
(உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது)









நாம் இனிமேல பழைய ஜமாஅத் முறைபடி தண்டனை கொடுத்தால் மட்டும் நமது ஊரை திருத்தமுடியும். இல்லை எனில் மேலப்பாளையம் போல கத்தி அரிவாள் தூக்கினால் தான் அடங்குவார்கள் என்றல் அதையும் செய்ய தயங்க கூடாது
சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.
கடையநல்லூர் மானம் போவதற்கு இந்த சம்பவம் மட்டுமல்ல. எத்தனையோ நடந்து முடிந்துவிட்டன. .
இனியும் எத்தனையோ புதைந்து கிடக்கிறது. ஒட்டுமொத்தமாக முஸ்லீம்கள் வாழும் நமதூரில் சமுதாயம் ஒற்றுமை இல்லையே என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். எனவே மக்கள் பொறுப்பெடுத்து தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் அவர்களை சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
***Makatti Rabi-Dubai
அஸ்ஸலாமு அலைக்கும்,
சமுதாய ஒற்றுமையி பேசி ஒன்றும் இல்லை. இந்த சம்பவம் ஒவென்றும் வீட்டின் உள்ளை நடக்கும் விடையம் சமுதாயம் ஒன்றும் செய்யாது. ஒவ்வெருவரும் தன் வீட்டின் உள்ளயும், வெளியும் மருந்து(குர்ஹான், ஹதிஸ்) அடித்தால் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்க்கலாம். இதை விட்டுவிட்டு வெட்டுதல், குத்துதல்,ஊர்க்கூட்டம் என்றால் சமுதையத்தில் ஒன்றும் நடகபோவதிலை. அல்லாஹ் போதுமானவன்.
அஸ்ஸலாமு அலைக்கும்,அடுத்த வீட்டில் நடக்குது நமக்கு ஏன் வம்பு ,என்று ஒதுங்குவது சரியல்ல ,நன்மையை ஏவி தீமையதடுங்கள் ,இதில் இளைகர்கள்,முன் வர வேண்டும்
m.asankhan