மேற்கு வங்காளத்தில் பெங்களூர் ரயில் பயங்கர விபத்து

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கவுகாத்தி & பெங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு மற்றொரு ரயில் மீது மோதிய விபத்தில் 2 பேர் Levitra online பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் புறப்பட்ட கவுகாத்தி & பெங்களூர் எக்ஸ்பிரஸ், நேற்று மாலை மேற்கு வங்காளம் மால்டா மாவட்டத்தில் உள்ள ஜமிர்கத்தா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது, இன்ஜின் திடீரென தடம் புரண்டது. 2 பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த அஜிம்கஞ்ச் பயணிகள் ரயில், பெட்டிகள் மீது மோதி பயங்கரமான மோதியது. இது பற்றி தகவல் கிடைத்ததும் விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக்குழு விரைந்தது. விபத்தில் 2 பயணிகள் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதற்கு நாசவேலை காரணமா என விசாரிக்கப்படுகிறது.

Add Comment