சிரிய ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் 95 பேர் பலி!

சிரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டம் Levitra No Prescription நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று ஹமா நகரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, நவீன துப்பாக்கி, டாங்கர்களைக் கொண்டு ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது.
இதில் 95 பேர் பலியானதாக மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்கள் போர்வையில் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பாவி மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment