மத வன்முறை தடுப்புச் சட்டத்தை தூக்கி எறிய முன்வரவேண்டும்! அனைத்து கட்சியினருக்கும் ஜெயலலிதா வேண்டுகோள்.

மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதாவை, அறிமுக நிலையிலேயே தூக்கியெறிய, அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்’ என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
மத வன்முறை தடுப்புச் சட்டத்தை, பார்லிமென்டின் இந்தக் கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மசோதா, மத வன்முறையை தடுக்கப் போகிறோம் என்ற பெயரில், மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் முற்றிலுமாக புறந்தள்ளி, மத்திய அரசே அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொள்ள வகை செய்யும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மற்றொரு முயற்சியாகும்.இதன் மூலம், மாநில அரசு அதிகாரமற்றதாகி Buy cheap Viagra விடுவதோடு, மத்திய அரசின் கருணைக்காக ஏங்க வேண்டியதோடு, ஆட்சிக் கலைப்பு என்ற மிரட்டலுக்கு பயந்தே செயல்பட வேண்டியிருக்கும். இதன் உண்மையான உள்நோக்கங்களை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் மாநில முதல்வர்களுக்கு, இந்த மசோதாவை எதிர்க்கும்படி கடிதம் எழுதியுள்ளேன்.

எனது அறிக்கையின் பிரதியும், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் அல்லாத அனைத்து எம்.பி.,க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாசிச மசோதாவுக்கு எதிராக குரல் கொடுக்கும்படி அதில் கேட்டுள்ளேன்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான உண்மையான உள்நோக்கத்தை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பார்லிமென்ட் எம்.பி.,க்கள் புரிந்து கொண்டு, அறிமுக நிலையிலேயே இதை தூக்கியெறியச் செய்ய, ஒன்றுபட வேண்டுமென அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Add Comment