ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் ரூ.2 திடீர் உயர்வு

ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் மண்எண்ணெயின் விலை திடீர் என ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொது வினியோகத் துறை மூலம் மண்எண்ணெய் பெற தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நகரப் பகுதிகளில் ஒரு கியாஸ் சிலிண்டர் வைத்து உள்ளவர்களுக்கு 3 லிட்டர் மண்எண்ணெயும், ஒரு சிலிண்டர் கூட இல்லாதவர்களுக்கு 10 லிட்டர் மண்எண்ணெயும், கிராமப்பகுதிகளில் ரேஷன்கார்டுக்கு 3 லிட்டர் மண்எண்ணெயும் வழங்கப்பட்டு Doxycycline No Prescription வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள மண்எண்ணெய் வழங்கும் நிலையங்களில் (பங்க்) இவை வழங்கப்படுகிறது.

கடந்த ஜுலை 31-ந் தேதி வரை இப்படி வழங்கப்படும் மண்எண்ணெய் ஒரு லிட்டரின் விலை ரூ.11.40 ஆக இருந்தது. நேற்று முதல் இதன் விலை திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.13.40 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Add Comment