ரயில் பாதை தகர்ப்பு-எம்.எல்.ஏ. ஹசன் அலி மீது குற்றம் சாட்டிய வக்கீலுக்கு சம்மன்

ராமநாதபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் அலி மீது விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்க்கப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டிய வழக்கறிஞரை அவரிடம் உள்ள ஆதாரங்களுடன் ஆஜராகுமாறு கியூ பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த 12-ம் தேதி விழுப்புரம் அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கியூ பிரிவு போலீசார் விழுப்புரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த கண்ணன், பாபு என்ற 2 வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலிக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் தங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அதை விசாரணையின் போது ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதை Buy cheap Amoxil அடுத்து குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு வழக்கறிஞர் கண்ணனுக்கு கியூ பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Add Comment