குவைத்தில் இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி

ஜூன் 18ம் தேதி மாலை 6:30 மணிக்கு குவைத் தமிழ்  இஸ்லாமியச் சங்கம் ‘இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி’ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமை தாங்க, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அவர்கள் ‘வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்’ என்ற தலைப்பிலும், சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் Buy Amoxil அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி அறிய www.k-tic.com என்ற இணையதளத்தை பயனபடுத்தவும். கருத்து தெரிவிக்க விரும்புவோர், தங்கள் கருத்துகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவும். http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தில் தங்களை இணைத்துக்கொண்டால் உடனுக்குடன் தகவல்கள் பெறலாம்.

Add Comment