விலைவாசி உயர்வு குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம்-அரசு ஒப்புதல்

டெல்லி: விலைவாசி உயர்வுப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து இன்று லோக்சபாவில் இந்த விவாதம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் பெரும் அமளியுடன் தொடங்கியுள்ளது. முதல் இரு நாட்களும் இரு சபைகளிலும் ஒரு அலுவலும் நடக்கவில்லை. விலைவாசி உயர்வுப் பிரச்சினை, ஊழல் பிரச்சினைகள் குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக கோரி போராட்டத்தில் குதித்தன. இதனால் இரு நாட்களும் சபையி்ல ஒரு அலுவலும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், இரு அவைகளிலும் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த மத்திய அரசு நேற்று ஒப்புக் கொண்டது. இதையடுத்து இன்று லோக்சபாவிலும், அடுத்த வாரம் ராஜ்யசபாவிலும் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெறவுள்ளது.

இன்று லோக்சபா கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். அது முடிந்ததும் பிற்பகல் 12 மணிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்படும். அதன் மீது பின்னர் விவாதம் தொடங்கும். விவாதத்தின் இறுதியில் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெறும்.

இன்றைய விவாதத்தை எதிர்க்கட்சித் தரப்பில் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா தொடங்கி வைப்பார். நிதியமைச்சர் பிரணாப் Viagra No Prescription முகர்ஜி விவாதத்தின் இறுதியில் பதிலளிப்பார்.


Add Comment