ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 26 பேர் பலி!

மத்திய பிரதேசத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாயினர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து, ஜபால்பூர் என்ற இடத்துக்கு, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இதில் 60 முதல், 70 பயணிகள் பயணித்தனர். இந்த பேருந்து ரைசான் மாவட்டத்தில் உள்ள ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது, சென்று கொண்டிருந்தபோது அதன் டயர் திடீரென வெடித்தது.
இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆற்றுக்குள் கவிழ்ந்து மூழ்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டதை கண்டு அருகில் இருந்த மக்கள் காவல் Buy Ampicillin மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 26 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

Add Comment