இணையதளத்தில் கோரிக்கை மனு அனுப்பிய கல்லூரி மாணவிகளுக்கு லேப்டாப், ரூ.70 ஆயிரம்

கோவை மாநகர திமுக சார்பில் கல்லூரி மாணவிகள் 2 பேருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் லேப்டாப்பினை buy Cialis online திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயரில் பிரத்யேக இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் மனு அளித்து உதவி பெற்று வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஇ படித்து வருபவர் ரம்ஷியா பேகம். இவர் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்து படிக்க நிதியுதவி வேண்டி மு.க.ஸ்டாலின் இணையதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தார். இதே போல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த கதிர்வேல். விவசாயி. இவரது மகள் சொர்ணசிந்து. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம்.காம் படித்து வருகிறார். இவரும் தான் படிப்பதற்கு உதவியாக லேப்டாப் வேண்டி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இணையதளத்திற்கு மனு அளித்து இருந்தார்.

இவ்விரு மாணவிகளின் மனுக்களை பரிசீலித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், நேற்று கோவை வந்த முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவி ரம்ஷியா பேகத்திற்கு ரூ.70 ஆயிரம் உதவித் தொகையும், மாணவி சொர்ணசிந்துவிற்கு இலவச லேப்டாப்பையும்  வழங்கினார். இதை பெற்றுக்கொண்ட மாணவிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை மாநகர திமுக செயலாளர் வீரகோபால் செய்திருந்தார். பின்னர் மாலை விமானம் மூலம் ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

Add Comment