பட்டாசு ஆலையில் வெடி விபத்து உடல் கருகி 6 பெண்கள் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பெண்கள் உடல் கருகி பலியாயினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அடுத்துள்ள காளையார்குறிச்சியில் கனகபிரபு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு பேன்சி ரகம் உட்பட பலவகை பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. ஆலையில் சிவகாசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

நேற்று மதியம் 2.30 மணியளவில் மருந்து கலக்கும் அறைமுன்பு, மருந்தை எடை போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.எடை போட்ட பின்பு கீழே சிதறிக்கிடந்த மருந்தை கூட்டி அள்ள முயன்றனர். அப்போது உராய்வால் ஏற்பட்ட தீப்பொறி, எதிர்பாராத விதமாக மருந்து மூட்டையில் பட்டது. பலத்த சத்தத்துடன் மருந்துகள் வெடித்துச் சிதறின. கரும்புகையுடன் ஆலையில் தீ பரவியது. ஆலை கட்டிடம் இடிந்து Buy Bactrim Online No Prescription விழுந்தது. அங்கு பணியிலிருந்த பெண்கள் 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலியானவர்கள் விபரம்: சிவகாசி அருகே புதுக்கோட்டையை சேர்ந்த சின்னத்தேவர் மனைவி அங்கம்மாள்(55), சண்முகத்தாய் (45), எரிச்சநத்தம் அருகே காடனேரியை சேர்ந்த வீரம்மாள்(50), ஆவுடைத்தாய் (52), பீகார் மாநிலத்தை சேர்ந்த மம்தா(26). மேலும், குல்லூர்சந்தையை சேர்ந்த அம்மாபொண்ணு, பத்மாவதி, வீரம்மாள், சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த பாண்டி, முருகன், புதுக்கோட்டையை சேர்ந்த முனியாண்டி, பீகார் மாநிலத்தை சேர்ந்த குஷ்மா ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த சிவகாசி மற்றும் விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தை அமைச்சர் உதயக்குமார், கலெக்டர் பாலாஜி, எஸ்பி நஜ்மல் ஹோடா, ஆர்டிஓ முனியசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

Add Comment