நேட்டோ படையினரால் காமிஸ் கொல்லப்படவில்லை: லிபிய அரசு மறுப்பு !

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக பொது மக்கள் போராடி வருகின்றனர். அவர்களது புரட்சிப்படை கடாபியின் ராணுவத்துடன் போரிட்டு வருகிறது. புரட்சிப் படைக்கு நேட்டோ படைகள் ஆதரவு தெரிவித்துள்ளன.அவர்கள் கடாபியின் ராணுவம் மீது குண்டுவீச்சு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜிலிட்டன் நகரில் உள்ள கடாபி செயலக அறை மீது நேட்டோவின் விமான படைகள் குண்டுவீசி தாக்கின. அதில் 32 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் கடாபியின் இளைய மகன் காமிஸ் (31) என்பவரும் ஒருவர் என புரட்சிப்படையின் செய்தி தொடர்பாளர் முகமது ஜவாவி தெரிவித்து இருந்தார்.

இதை தங்கள் உளவுப்படை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆனால் இதை லிபியா அரசு மறுத்துள்ளது. அரசின் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நேட்டோ படையினரால் காமிஸ் கொல்லப்பட வில்லை. இதுபோன்ற வடிகட்டிய பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அமைதியான நகரம் மீது குண்டு வீசி பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். வதந்தியை புரட்சிப்படையினர் பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

காமிஸ் ரஷிய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றவர். தற்போது புரட்சிப்படையுடன் போரிடும் கடாபியின் ஆதரவு ராணுவத்தில் முக்கிய பொறுப்பு Buy Cialis வகிக்கிறார்.

Add Comment