சோமாலியாவில் பட்டினியின் கொடுமை: உணவுக்காக ராணுவத்துடன் மோதி 7 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அங்கு வாழும் சுமார் 11 லட்சம் மக்கள் சாப்பிட உணவு இன்றி பசி பட்டினியால் தவிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு உலக உணவு திட்டத்தின் சார்பில் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.
அதற்காக ரூ.4 ஆயிரம் கோடி தேவைப்படுவதாகவும் அவற்றை உலக நாடுகள் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. சோமாலியாவில் பட்டினியால் வாடும் மக்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாட்பாடோ முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு உணவு பொருட்கள் எடுத்து வரப்பட்டன.

அதை அறிந்ததும் பசியால் தவித்த மக்கள் அவற்றை பெற முண்டியடித்தப்படி திரண்டனர். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் அவர்களை கட்டுப்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ராணுவத்தினரை தாக்கியதால் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.அதை தொடர்ந்து அவர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் Buy cheap Doxycycline பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

Add Comment