பயங்கரமான ஆட்சியாக நாட்டுக்குத் தெரிவிக்கிறார் ஜெயா: கலைஞர்

திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் 06.08.2011 அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டு பேசியதாவது:

 

குண்டர் சட்டம் என்ற ஒரு கொடூர சட்டத்தை இன்றைக்கு தம்பி கலைவாணன் மீது ஏவியிருக்கிறார்கள். குண்டர் சட்டம் என்பது உச்சகட்டமாக போடப்படுகின்ற ஒரு நடவடிக்கை. உன்னை குண்டர் சட்டத்திலே தள்ளிவிடுவேன் என்றால், ஏறத்தாழ தூக்குத் தண்டனைக்கு ஒப்பாக, மரண தண்டனைக்கு ஒப்பாக சொல்லப்படுகின்ற ஒரு வார்த்தைதான், குண்டர் சட்டத்திலே உன்னைப் போடுவேன் என்று சொல்வதும் – போடுவதும்.

நாட்டிலே குண்டர்களாக இருப்பவர்களையெல்லாம் விட்டுவிட்டு, கலைவாணனை இந்தச் சட்டத்திலே மாட்டியிருப்பதற்கு என்ன காரணம். அவரை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும். வெறுக்க வேண்டும். கலைவாணனை வெறுப்பதன் மூலம் இந்தக் கழகத்தையே வெறுக்க வேண்டும். அதன் காரணமாக கழகம் பலவீனப்பட வேண்டும் என்ற இவ்வளவு சதித் திட்டங்களை மனதிலே வைத்துக்கொண்டு, இந்தச் சட்டத்தை பிரயோகித்திருக்கிறார்கள் கலைவாணன் மீது.

கலைவாணன் என்றதும் எனக்கு மறைந்த நம்முடைய நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவும் வருகிறது. நான் தம்பி கலைவாணனுக்கு அந்தப் பெயர் வைத்தபோதே என்.எஸ்.கிருஷ்ணனுடைய ஞாபகத்திலே தான் அந்தப் பெயரை வைத்தேன். நீங்கள் தான் எனக்குப் பெயர் வைத்தீர்கள் என்று என்னிடத்திலே கலைவாணன் சிரித்துக் கொண்டு சொன்னபோது, நான் பெயர் வைத்த பாவம், நீ இன்றைக்கு குண்டர் சட்த்தில் அடைக்கப்பட்டுக்கொண்டாயே Buy cheap Lasix என்று தான் நினைத்துக்கொண்டேன்.

ஆனால், குண்டர் சட்டம் எப்போது பாயும் என்பது அரசியல்வாதிகள் அனைவருக்கும், சாதாரண அரசியல் தெரிந்தவர்களுக்குக் கூட புரிந்த ஒன்றுதான். இதை பயன்படுத்துவதன் மூலம், ஒரு பயங்கரமான ஆட்சியை நான் நடத்துகிறேன் பார் என்று அம்மையார் ஜெயலலிதா நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் பொருள். இவ்வாறு கலைஞர் பேசினார்.

Add Comment