உணவு உற்பத்தியை பெருக்க 2வது பசுமை புரட்சியை ஏற்படுத்த வேண்டும்: ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அழைப்பு!

“உணவு உற்பத்தியை பெருக்க 2வது பசுமை புரட்சியை விஞ்ஞானிகள் ஏற்படுத்த வேண்டும்” என ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அழைப்பு விடுத்தார். பெங்களூரில் உள்ள விவசாய பல்கலைக் கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி Buy cheap Levitra பிரதிபா பாட்டீல், 656 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கி பேசியதாவது:
நாட்டில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக மழை குறைந்துள்ளது. எனவே, தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக, மழை நீர் சேமிப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உணவு உற்பத்தியை பெருக்க பசுமை புரட்சி ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றோம். அந்த கால கட்டத்துக்கு அது போதுமானதாக இருந்தது. இப்போதைய மக்கள் தொகையை கணக்கிடும்போது, 2வது பசுமை புரட்சியை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

இதில் தரிசு நில மேம்பாடு, குறைந்த காலத்தில் நிறைவான பயிர் முறை, மக்கள் நலத்துக்கு கேடு ஏற்படுத்தாத மகசூல், விஞ்ஞானிகள் புதிய பயிர் வகைகளை அறிமுகம் செய்வது, விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பிரதிபா பேசினார்.

Add Comment