கோவை அருகே பரிதாபம் கிணற்றுக்குள் கார் பாய்ந்து 2 பெண்கள், டிரைவர் சாவு

தொண்டாமுத்தூர் : கோவை அருகே கிணற்றுக்குள் திடீரென கார் பாய்ந்து 2 பெண்கள், டிரைவர் பலியாகினர். 2 குழந்தைகள் படுகாயத்துடன் தப்பினர்.

கோவை பேரூர் அருகே உள்ள கரடிமடை மணியகாரதோட்டத்தை சேர்ந்தவர் திவாகர். கோவை பெரியகடை Buy Viagra Online No Prescription வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மீனா(28). இவர்களுக்கு இந்திரஜித்(6), பவன்ஜித்(3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலை மீனா, திவாகரின் தாய் வசந்தாமணி(51) ஆகிய இருவரும் காரில் கடையை திறக்க புறப்பட்டனர். 2 குழந்தைகள், டிரைவர் சிவா(37) ஆகியோர் உடன் சென்றனர். மீனா காரை ஓட்டினார். திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் முன் இருந்த கிணற்றுக்குள் தலை குப்புற பாய்ந்தது. 120 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. இதை வீட்டில் இருந்து பார்த்த திவாகரும், அவரது தந்தை அய்யாசாமியும் அலறியடித்து விரைந்து வந்தனர்.

இருவரும் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். படுகாயத்துடன் கிடந்த 2 குழந்தைகளையும் தோளில் தூக்கி மேலே வந்தனர். இருவரையும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோவை தீயணைப்பு நிலைய வீரர்கள் வசந்தாமணி, மீனா, டிரைவர் சிவா ஆகியோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு 3 பேரும் பலத்த அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. 3 சடங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி சண்முகம் விரைந்து சென்று விசாரித்தார். பேரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். கண் முன்னாலேயே வசந்தாமணியும், மீனாவையும் பறிகொடுத்த அய்யாசாமியும், திவாகரும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மீனா தற்போது தான் கார் ஓட்ட பழகியுள்ளதாக தெரிகிறது. அதனால், தவறுதலாக ஆக்சிலேட்டரில் கால் வைத்து அழுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Add Comment