பன்றிக் காய்ச்சல்: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நோய் கண்டவர்களை தனிமைப்படுத்தி, தனி அறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கேரளத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் மருத்துவர்கள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயணிகளை பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் இல்லை. எனினும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, பன்றிக் காய்ச்சல் நோய்க்கு காரணமான, “அ ஏ1N1′ வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில், மருத்துவக் குழுக்களை நியமித்து, பயணிகளை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, மழை துவங்கியுள்ளதாலும், தட்பவெட்ப நிலை மாறுவதை மனதில்கொண்டும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காய்ச்சல், சளி, உடம்புவலி, தொண்டை சளி உள்ளவர்கள், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை தேவை எனில், அரசு மருத்துவமனைகளிலேயே தொண்டை சளி, ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவர்.

பரிசோதனை தேவை என்றால் அரசு மருத்துவமனையிலேயே தொண்டை சளி, இரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள். சென்னை கிண்டியிலுள்ள கிங் நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது தனியார் பரிசோதனை நிலையங்களிலும் வைரஸ் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

1.சென்னையில் உள்ள பாரத் ஸ்கேன்ஸ்,

2. ஹைடெக் டயக்னோடிக் சென்டர்,

3. டயக்னோஸ்டிக் சர்வீசஸ்,

Buy Cialis style=”text-align: justify;”>4 .ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் சென்டர்,

5. லிஸ்டர் மெட்ரோ பாலிஸ் லேப்,

6. கோவையில் உள்ள மைக்ரோ லேப்,

7. இம்யூனோ ஆம்சிலரி கிளினிக்கல் சர்வீஸஸ்,

8. திருச்சியில் உள்ள மரு.ராத்ஸ் லேப்,

9. நாகர்கோவிலில் உள்ள விவேக் லெபாரேட்டரி ஆகிய 9 தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு…: பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு எவரேனும் வந்தால், அவர்களை தனிமைப்படுத்தி தனி அறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இத்தகைய நோயாளிகளின் விவரங்களை அந்தந்த மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கும், சென்னை பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கும் தெரிவிக்க வேண்டும்.

அவர்களிடம் இந்த நோய்க்கான டாமி ப்ளூ மாத்திரைகள் உள்ளன. மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரால் மருந்துக் கடைகளுக்கு இந்த மருந்தை விற்க உரிமம் தரப்பட்டுள்ளது.

Add Comment