வறுமைக்கோட்டுக்குக் கீழ் தமிழத்தில் எவரும் இல்லை: முதல்வர்

“தமிழகத்தைப் பொருத்தவரை வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியல் என்று எதுவும் இல்லை” Cialis online என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

 

மேலும் பிற மாநிலங்களில் ரேஷன் கார்டுகளுக்குப் பொருட்கள் வழங்குவதில்கூட வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஒரு விலை என்றும் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு விலை என்றும் வழங்குகிறார்கள் எனவும் தெரிவித்தார். ஆனால் இந்நிலை தமிழகத்தில் இல்லை என்றும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஒரே விதமான விலையில்தான் எல்லோருக்கும் பொருட்கள் வழங்கப்படுகிறது. 20 கிலோ இலவச அரிசியும் எல்லோருக்கும் இந்த அரசு வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

ஆனால் மத்திய அரசு வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்ற ஒரு பட்டியலைத் தயாரித்து உள்ளது. அந்தப் பட்டியலை தமிழக அரசு ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்படவில்லை என அவர் கூறினார்

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் பேசும் போது, ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு உதவிபெற வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகள் கூட கிடைக்கவில்லை என கூறினார்

Add Comment