கடத்துவோரின் பேராசையால் முஸ்லிம் பெண்ணுக்கு தூக்கு தண்டனை!

[ கடுமையான உடல் உழைப்பு, நேர்மையான தொழில் மூலம் பொருளீட்டி கையில் இருப்பதற்குத் தக்க தமது வாழ்வை அமைத்துக் கொண்டு வாழும் பல இலட்சம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில், பார்த்தீனியச் செடியாக முளைத்து இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் சில முஸ்லிம்களால், ஒட்டு மொத்த சமூகமும் அவப்பெயருக்குள்ளாகிறது.

கடத்துவோரின் ஒரே நோக்கம் பணம், பங்களா, ஜனா, பனா, ஆடம்பரம், பகட்டு. கறி, மீன், எறால் எந்நேரமும் உண்ணல். இவையனைத்திற்கும் எளிதாகப் பணம் ஈட்டணும். வேறு நோக்கமில்லை. எந்த நிலைக்கும் இறங்கிவிடுகின்றனர். சக உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை. கல்வி, தொழில், வேலை, வருமானம் எதுவுமில்லாதவர், எளிதாக சம்பாதிக்க நினைப்பவர்களைக் கண்டெடுத்து கிழக்காசிய நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்த பயன்படுத்துகின்றனர்.

இவர்களது வலையில் சிக்கும் பலர் பிடிபட்டு, தூக்கு தண்டனை தரப்பட்டு மலேசியா, இந்தோனேசியா சிறைகளில் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக இணையதளம் தகவல் தருகிறது. ஒரே இரவில் ஒன்பதுபேரை இந்தோனேசியா அரசு தூக்கிலிட்டுள்ளதாகவும் செய்தி பதியப்பட்டுள்ளது. கல்வி, தொழில், வீடு கட்டுதல் எதற்கும் அரசுப் பணம் உதவி இல்லாத நிலையில் வானூயர்ந்த கட்டிடங்கள், வண்ணங்களில் இல்லங்கள், பல இலட்சம், கோடிகளில் திருமணங்கள் Buy cheap Ampicillin நடக்கின்றன. நேர்மையாக பொருளீட்டியவர்க்கு நிச்சயம் இந்த வளர்ச்சி கிடைக்காது.]

‘‘சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் பட்டூர் மாங்காடு பெண் 62 வயது பசீலா பீவி திருவல்லிக்கேணி திப்புசாகிபு தெரு முஸ்லிம் டிராவல்ஸ் மூலம் மலேசியா சென்றுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பசீலா பீவியிடம் ஒரு சூட்கேஸைக் கொடுத்து மலேசியாவில் கொடுத்து விடுமாறு கூறியிருக்கின்றனர். மலேசியா சுங்க அதிகாரிகள் பசீலா பீவி வைத்திருந்த பெட்டியில் ‘‘கிட்டாமின்’’ என்ற போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

 

மலேசியா நாட்டு சட்டப்படி தூக்கு தண்டனை வழங்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கொடுத்தனுப்பியவர்கள் 4 இலட்சம் நஷ்டஈடு தருவதாகவும், தூக்கிலிருந்து காப்பாற்றி விடுவதாகவும் பசீலா குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர். ஜுன் 21 அன்று பசீலா பீவிக்கு தூக்கு தண்டனை எனப் பத்திரிகைகள் செய்தி வெளியிட, பசீலா குடும்பத்தார் தமிழக முதல்வர் தனிப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர், மலாக்கா இந்திய முஸ்லிம் சங்கத்துக்கு மனுச் செய்ததோடு இ.யூ.மு.லீக் தலைமையகத்திடமும் மனுக்கொடுத்துள்ளனர்.

வேலூர் தொகுதி எம்-.பி. அப்துல் ரஹ்மான், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா ஆகியோரிடம் நேரடியாக மனுவைக் கொண்டு சென்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜுன் & 16 & 2011 மணிச்சுடர் நாளிதழ் முதல் பக்கத்தில் இச்செய்தியைப் பதிவு செய்து இணையத்திலும் வெளியிட்டிருக்கிறது.

கடுமையான உடல் உழைப்பு, நேர்மையான தொழில் மூலம் பொருளீட்டி கையில் இருப்பதற்குத் தக்க தமது வாழ்வை அமைத்துக் கொண்டு வாழும் பல இலட்சம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில், பார்த்தீனியச் செடியாக முளைத்து இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் சில முஸ்லிம்களால், ஒட்டு மொத்த சமூகமும் அவப்பெயருக்குள்ளாகிறது.

கடத்துவோரின் ஒரே நோக்கம் பணம், பங்களா, ஜனா, பனா, ஆடம்பரம், பகட்டு. கறி, மீன், எறால் எந்நேரமும் உண்ணல். இவையனைத்திற்கும் எளிதாகப் பணம் ஈட்டணும். வேறு நோக்கமில்லை. எந்த நிலைக்கும் இறங்கிவிடுகின்றனர். சக உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை. கல்வி, தொழில், வேலை, வருமானம் எதுவுமில்லாதவர், எளிதாக சம்பாதிக்க நினைப்பவர்களைக் கண்டெடுத்து கிழக்காசிய நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்த பயன்படுத்துகின்றனர்.

இவர்களது வலையில் சிக்கும் பலர் பிடிபட்டு, தூக்கு தண்டனை தரப்பட்டு மலேசியா, இந்தோனேசியா சிறைகளில் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக இணையதளம் தகவல் தருகிறது. ஒரே இரவில் ஒன்பதுபேரை இந்தோனேசியா அரசு தூக்கிலிட்டுள்ளதாகவும் செய்தி பதியப்பட்டுள்ளது. கல்வி, தொழில், வீடு கட்டுதல் எதற்கும் அரசுப் பணம் உதவி இல்லாத நிலையில் வானூயர்ந்த கட்டிடங்கள், வண்ணங்களில் இல்லங்கள், பல இலட்சம், கோடிகளில் திருமணங்கள் நடக்கின்றன. நேர்மையாக பொருளீட்டியவர்க்கு நிச்சயம் இந்த வளர்ச்சி கிடைக்காது.

தீமைகளைக் கரத்தால், நாவால், மனத்தால் தடுக்கும்படி இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமையும் வலியுறுத்துகிறது. தனது அண்டை வீட்டுக்காரர், ஊர்க்காரர், தெருக்காரர், பக்கத்து கடைக்காரர் எந்த விதத்தில் பொருளீட்டுகிறார் என்பதைக் கண்டு கொள்வதில்லை. தவறான வழியில் பொருளீட்டுவோரின் பணத்தில் வாழக்கூடிய, தொடர்புடைய உறவுகள் சுய லாபத்தை புறந்தள்ளி தவறைச் சுட்டிக் காட்டவேண்டும்.

பல ஆயிரம், லட்சப் பேரின் வாழ்வை நாசமாக்கும் போதைப் பொருளில் வரும் லாபத்தால் நீ வாழத்தான் வேண்டுமா? கேள்வி எழுப்பி புத்தியூட்டவேண்டும். செவிமடுக்காதவரின் உறவை துண்டிக்க வேண்டும். கொடுக்கல் வாங்களைக் கைவிடவேண்டும். ஷைத்தானாக மாறிப்போனோரின் குடும்பங்களில் திருமண உறவு வைக்கக்கூடாது.

மனித குல விரோதிகளான அவர்களுக்கு கபர்ஸ்தான் மறுக்கணும். சபைக்கு, குடும்ப நிகழ்வுகளுக்கு அழைக்கக்கூடாது. கடைப்பிடிக்கப்பட்டால், பசீலா பீவி போன்றோரும், பல பஷீர்களும் காப்பாற்றப்படுவார்கள். சமூகத்தில் பெண்களின் தங்க நகைப் பித்து ஒழிக்கப்படணும். உழைத்து வாழும் எண்ணம் மேம்படணும். கால் ஊனத்துடன் நாற்காலிக்கு ஒயர் பின்னும் மாற்றுத்திறனாளி. தள்ளாத வயதில் ரிக்ஷா மிதிக்கும் முதியவர். கொளுத்தும் வெயிலில் செங்கல் சுமக்கும் சித்தாள். வீதியில் பூவிற்கும் பெண். அதிகாலை 3 மணிக்கு எழுந்து காய்கறி வாங்கி விற்கும் பெண். வீதி சுத்தம் செய்யும் ஆண், பெண் இவர்களைப் பார்த்து உழைப்பின் அருமை பெருமை உணரப்படவேண்டும்.

Add Comment