எண்ணெய் விலை குறைவடையும்: பிரணாப் நம்பிக்கை!

Amoxil No Prescription width=”615″ border=”0″>

தற்போதைய உலக சூழ்நிலையை அனைத்து நாடுகளும் உற்று நோக்கி வரும் நிலையில், இந்தியா பொருளாதாரம் ஒரு நேர்மறையான திசையில் நகர்கிறது, மற்றும் சர்வதேச பொருட்களின் விலைகளில் இறக்கம் ஏற்படும் என தான் நம்புவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் வலுவான மற்றும் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தின் சரிவு ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என முகர்ஜி கூறினார்.

கடந்த வாரம் அமெரிக்க பொருளாதாரத்தில் சரிவு ஏற்ப்பட்டது. இதன் தாக்கம் உலகளாவிய பங்கு சந்தைகளில் பெரிய பூகம்பத்தை ஏற்பட செய்தது. இதனை தொடர்ந்து கச்சா எண்ணெய் உட்பட, சர்வதேச அளவிலான பொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. கச்சா எண்ணெய் விலை சரிவு முழுமையான திருப்தி இல்லை. அது இன்னும் நியாயமான உயர்வாகவே உள்ளது.

எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் விலை விரைவில் குறையும் என நம்பப்படுவதாகவும், மேலும், எங்களுக்கு பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், எண்ணெய் மானியம் குறைப்பதில் உதவியாகவும் இருக்கும்.

இந்திய பங்கு சந்தை இழப்பிலிருந்து சரியாகிக் கொண்டு வருகிறது. இதனை ஆசிய சந்தைகளோடு ஒப்பிட்டு பார்த்தால் பல்வேறு ஆசிய சந்தைகள் வீழ்ச்சியின் சராசரி 2-4 சதவீதம் மாறுபாடு இருக்கும் என்று முகர்ஜி கூறினார்

Add Comment