தமிழக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் : ஜெ.

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் (இந்திய கம்யூனிஸ்டு) பேசும்போது, `புதுக்கோட்டை பூங்கா நகரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து காவிரிக் குடிநீர் வழங்க அரசு ஆவன செய்யுமா?`’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.பி.முனுசாமி பேசும்போது, “புதுக்கோட்டை பூங்கா நகரில் தனியாக காவிரி குடிநீர் வழங்க 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உதவியுடன் அமைக்க நகராட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடித்தவுடன் காவிரி குடிநீர் இணைப்பு Doxycycline No Prescription வழங்கப்படும்” என்றார்.

  இந்த கேள்வி தொடர்பாக எழுப்பப்பட்ட துணை கேள்விக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து,

’’கடந்த ஆட்சியில் மின்சாரம் வழங்குவதில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், மின் பற்றாக்குறை ஏற்பட்டது.

அதுபற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இதுபோல் குடிநீர் வழங்குவதிலும் கடந்த ஆட்சியில் முறைகேடுகள், தவறுகள், குறைபாடுகள் இருந்தன. அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. உரிய அக்கறையும் செலுத்தவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்து 21/2 மாதங்கள்தான் ஆகிறது. ஒவ்வொரு குறைபாடுகளையும் கண்டுபிடித்து சரி செய்து வருகிறோம். மின்சார தட்டுப்பாட்டை சரிசெய்ய இந்த அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

அதுபோல அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதிலும் இந்த அரசு முன்னுரிமை அளித்து செயல்படும். ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றும்’’ என்று கூறினார்.

Add Comment