EX-MLA…தனது லட்சியத்தை அடைய….

தனது லட்சியத்தை அடைய சிலர் குறுக்குவழியில் செல்வார்கள். ஆனால், இவரோ குறுக்குவழியையே ல ட்சியமாக, கொண்டவர். கதருக்கே உரிய கோஷ்டிகளில் இவர் தனி கோஷ்டி. அதாவது, தனியாக ஒரு  கோஷ்டியை வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது பொருளல்ல. தனியாக இருப்பதுதான் இவரது கோஷ்டி.  தன்னைத் தவிர யாருக்கும், எப்போதும் இவர் விசுவாசமாக இருந்ததில்லை. இவர் ஏற்றிவிட்ட ஏணியை  எட்டி உதைக்கமாட்டார். எரித்து அழித்துவிடுவார். அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் சகஜம்தான்  என்றாலும் இன்றைய தோல்வி இவரை துவள வைத்துவிட்டது. காரணம், கடந்த ஆட்சியில் ஆளுங்கட் சியாக இருந்தவர்களைவிட அதிக பயனை அனுபவித்தது இவராகத்தான் இருக்கமுடியும். சொந்தக் கட் சியைவிட, சார்ந்த கட்சிக்கு ஜால்ரா போடுவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டி. ஆனாலும் இப்போது  அமைதியாக இருக்கிறார். காரணம், இவரது மனதில் ஒரு தனிக் கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. சாய்வு  நாற்காலியில் ஓய்வில் இருக் கும் அவரின் மனசாட்சியிடம் பேச்சுத் கொடுத்தோம். அவரது வாக்குமூலம் :

‘கடந்த ஐந்து ஆண்டுகள்தான் என் வாழ்க்கையின் பொற்காலம். நான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாக  விளைந்தது. ஆனால், அடுத்த ஐந்தாண்டு காலத்தை எப்படி ஓட்டப் போகிறேன் என்பதுதான் கேள்விக்கு றியாக இருக்கிறது.

கல்லூரிக்குச் சென்றதிலிருந்து கறுப்பு கோட்டுப் போட்டு தொழில் செய்யும்வரை அடிக்கடி வராத அரசுப்  பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நான்,இன்று ஐநூறு கோடிக்கு மேல் அடித்துச் சுருட்டிவிட்டேன். எல்லாம் கூட்டணித் தலைவர்கள் கொடுத்த ஆசீர்வாதம். நான் எனது கட்சித் தலைமையை வாழ்த் தியதைவிட கூட்டணித் தலைவர்களை வாழ்த்தியதுதான் அதிகம். அதுதான் என்னை இந்த அளவிற்கு வ ளர்த்திருக்கிறது.

சாதாரண சமையல்கார தாத்தா வழியிலிருந்து வந்தவன் நான். எங்கள் பகுதியில் நாடார் சமுதாயத்தினர்  அதிகம். அவர்களுக்கும், எங்களுக்கும் ஒத்துப் போகாததால் தனி ஆலயம் வைத்து வழிபாடு செய்தோம்.  தட்டுத் தடுமாறி பள்ளிப் படிப்பை முடித்தேன். அவசரகால சட்டம் அமலில் இருந்தபோது சட்டத்தை முடி த்து தொழிலுக்கு வந்தேன். அந்தக் காலத்தில் ராமநாமம் கொண்டவர் லீடிங் லாயர். அவரின் மகனும்,  நானும் ஒரே செட். எனவே, அவரிடமே எனது ஆரம்பப் Buy Ampicillin Online No Prescription பணிகளை ஆரம்பித்தேன்.

எனக்கென சொந்தமாக காரோ, பைக்கோ இல்லாத காலமது. எங்கள் மரத்து கிராமத்தில் இருந்து தெற்கே  உள்ள காசிக்கு என்றாவது வரும் பேருந்துக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருப்பேன். பின்னாளில் மத்திய  அமைச்சரவைக்குச் சென்ற திருவண்ணாமலை கடவுள் பெயர்க்காரரும் சட்டத் தொழிலில் இருந்தார்.  எனவே, அவரது அலுவலகத்தில் சென்று இணைந்துகொண்டேன். அவருக்கு டெல்லி பதவி கிடைக்கவே  எனக்கு பம்பர் குலுக்கல் அடித்தது. இதற்கிடையில் மாவட்ட இளைஞர் கட்சி என்னை ஏற்றுக்கொண்டிருந் ததால் கட்சியிலும் எனக்கு ஏறுமுகம் துவங்கியிருந்தது.  எனது நண்பர் மத்திய அமைச்சர் குழுவில்  இடம்பெற்ற பிறகுதான் நான் வெளியில் சென்றுவர அம்பாஸிடர் கார் எனக்கு அன்பளிப்பாகக் கிடைத்தது.  அடுத்து எனக்கு 89-ல் சீட்டு கிடைத்தது. தெற்கு காசியில் போட்டியிட்டு ஜெயித்தேன். அதன்பிறகு வள ர்ச்சிப் பாதையில் என் வாழ்க்கை துவங்கியது. அதுவரை மரத்து கிராமத்திலிருந்த எனது ஜாகையை காசி யின் தெற்குப் பகுதிக்கு மாற்றிக்கொண்டேன். அடுத்து 91-லும் அதே தொகுதியில் எனக்கு சீட் கிடைக்க  கூட்டணிக் கட்சிகளின் தயவால் வெற்றி பெற்றேன். அடுத்து 96லும் கூட்டணிக் கட்சியின் தயவே என்னை  மக்களவைக்கு அனுப்பி வைத்தது.

துணிக்கடையில் சேலை உடுத்தியிருக்கும் பொம்மையைப் பார்த்தாலும் என் வாயில் எச்சில் ஊறும். என்  சுபாவம் அப்படி. எங்கள் மாவட்டத்திலிருந்த நர்ஸிங் கல்லூரியின் தாளாளர் எனக்கு அடிக்கடி செட்டப்  செய்து தருவார். கல்லூரியின் அலுவலகத்திற்குள்ளேயே நான் கச்சேரி நடத்துவேன். ஒருமுறை மக்களிடம்  கையும்களவுமாக மாட்டிக்கொண்டு ரொம்பவும் அசிங்கப்பட்டுப் போனேன். ஆனாலும், ‘அரசியலில் இதெ ல்லாம் சகஜமப்பா’ என்று கவுண்டமணி பாணியில் வந்துவிட்டேன்.

நான் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவதற்கு எங்கள் கட்சித் தலைவரின் அகால மரணமும் அம்மாவின் தயவும் எனக்கு கைகொடுத்தது. சாதாரணமாக அரசியல்வாதிகள் எல்லாம் மற்றவர்களை க ண்டித்துப் பேசித்தான் சர்ச்சையில் சிக்குவார்கள். எனக்குத் தெரிந்து நான் யாரையும் கடுமையாக கண்டித் துப் பேசியதாக நினைவில்லை. ஆனால், நான் வாழ்த்திப் பேசினாலே அது சர்ச்சையைக் கிளப்பிவிடும்.  காரணம், நான் எங்கள் கட்சியின் தலைமையை அல்ல. கூட்டணித் தலைவர்களையே கூடுதலாக வாழ்த் துவேன்.அவர்களை வாழ்த்துவதில்தான் வரவு இருக்கிறது என்ற விவரம் அறிந்தவன் நான். இரண்டாவது  முறையாக நான் அவைக்குள் சென்றபோது அம்மாவை வாழ்த்தி ‘எங்களின் கதர்ச் சட்டைகள் குங்குமம்  சுமக்கும் கழுதைகளாக இருப்போம்’ என்று நான் கூறி வைத்தது ஒட்டுமொத்த கதரையும் கதற வைத்தது.  அந்த ஜால்ரா சத்தத்தில் அம்மா குளிர்ச்சியடைய எனது வியாபாரம் நன்றாக நடந்தது. எங்கள் பகுதியில்  பெரிய லாட்ஜ் ஒன்றை விலைக்கு வாங்கினேன். பின்னர், சாலை அபிவிருத்திப் பணிகளில் வரும்  மேம்பாலத்தால் அந்த லாட்ஜ் இடிபட்டுவிடும் என்பது அறிந்து ஒரு கோடிக்கு அதை விற்றுவிட்டேன்.

அடுத்து கல்வி வியாபாரத்தைக் கையிலெடுத்தேன். பெற்றோர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி பினாமி  பெயரில் சொத்துக்கள் வாங்கினேன். வேறு ஒருவருக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலத்தை அந்தோனி யாருக்கு பாகம் செய்தவரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து பவர் கொடுத்ததாக பதிவு செய்தேன்.  அந்த பினாமியிடமிருந்து அந்த நிலத்தை எனது அறக்கட்டளைக்கு வாங்கியதாக பத்திரப்பதிவு செய்தேன்.  நிலத்தின் உரிமையாளர் போலீஸ், புகார், வழக்கு என சென்றதால் சிக்கலாகிவிட்டது. உடனே நான் அந்த  நிலத்தை மீண்டும் பினாமியின் பெயருக்கே மாற்றி எழுதினேன். இதனால் போலிப் பத்திரம் தயாரித்ததாக  அந்த பினாமி, மாதக்கணக்கில் சிறையில் இருந்தார். இன்றும் அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அந்த  வழக்கில் நானும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆட்சியிலிருந்த ஐயாவின் தயவால் நான்  தப்பினேன். இப்போது மலையடிவாரத்தில் என் கல்வி, வியாபாரம் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது.

கதர் கட்சி உடைந்தபோது நான் ஐயாவுடன் சென்றுவிட்டேன். அந்த நேரம்தான் என்னை கட்சியின்  முக்கிய தலைவர்களில் ஒருவராக வெளிக்காட்டிக் கொள்ள முடிந்தது. அந்த நேரத்தில் நான் ஏதாவது பேசி  சிக்கலில் மாட்டிக்கொண்டதுண்டு. ‘ராஜீவுக்குத் தந்த மரியாதையை அவரின் விதவை மனைவிக்குத்  தரமுடியாது’ என்று நான் பேசியதை எங்கள் கட்சியின் தலைமை எப்படி மறந்துவிட்டது என்று எனக்கு  இன்னும் விளங்கவில்லை. இந்தப் பேச்சு பெரிய சிக்கலை ஏற்படுத்தி எனது கொடும்பாவி கொளுத்தும்  அளவிற்குக் கொண்டு போய்விட்டது.
2006-ல் நான் வெற்றி பெற்றதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஆட்சியில்  ஆளுங்கட்சியினரும் சரி, கூட்டணிக் கட்சியினரும் சரி என்னைப் போல் பலனடைந்தவர்கள் ஒருவருமி ல்லை. ஆளுங்கட்சி அமைச்சர்களே கண்டக்டர், டிரைவர் போஸ்டிங்கில் பத்திலிருந்து இருபது பேரைத் தான் சேர்த்திருப்பார்கள். ஆனால், நான் நூற்றுக்கும் மேற்பட்டோரை அதில் நுழைத்திருக்கிறேன்.  ஒவ்வொரு போஸ்டிங்கிற்கும் சராசரியாக இரண்டு லட்ச ரூபாய். எங்கள் கட்சி அந்தக் கூட்டணியில்  தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யவே என்னைச் செல்லப்பிள்ளையாக வலம்வர வைத்தார் அந்த ஐயா.  இதனால் நான் கேட்டதெல்லாம் கிடைத்தது, நினைத்ததெல்லாம் நடந்தது.

எங்கள் தொகுதியில் இருக்கும் ஒரு நதி அணையில் சுமார் இருநூறு ஆண்டுகளாக தூர்வாரப்படாமல்  இருந்தது. அதாவது இருநூறு ஆண்டுகள் சேர்ந்த ஆற்று மணல் அள்ளப்படாமல் இருந்தது. அதை  அள்ளும் காண்ட்ராக்ட்டை செல்லமான பினாமி பெயரில் எடுத்தேன். செல்வம் கொட்டத் தொடங்கியது.

அதாவது, ஆற்றுமணலே கிடைப்பதற்குக் கஷ்டமான நேரத்தில் எனக்கு மணலை அள்ள அரசு பணம்  கொடுத்தது. அள்ளிய மணலையும் அதிக விலைக்கு விற்க முடிந்தது.நூற்றுக்கணக்கான லாரிகள் மணலை  அள்ளிக்கொண்டேயிருக்க, மூன்று ஆண்டுகள் இந்த மணல் வியாபாரம் என்னை மகிழ்வித்தது.

அடுத்து மலையோரத்தில் விலங்குகளிடமிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க சோலார் மின்வேலி அமைக்க  பல கோடிக்கு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. அந்த காண்ட்ராக்டரிடம் நான் ஃபிப்டி ஃபிப்டி ஷேர் பிரித் துக்கொள்ள, வேலி வேலை அப்படியே முடங்கிப் போனது. அது மலையடிவாரம் என்பதால், அதிலிருந்து  இன்றுவரை பெரிதாக எதுவும் பிரச்னை கிளம்பவில்லை. அதேபோல் கல்வி வியாபாரத்திற்காக நான்  மடக்கிப் போட்டிருக்கும் அரசு நிலங்களிலிருந்து எப்போது பிரச்னை உருவாகும் என்பதும் தெரியவில்லை.

மக்களவையிலிருந்த நடராஜன், விஜயமானவர், ஞானமானவர், வாரிசு ஒருவர் என அனைவரிடத்திலும்  மேம்பாட்டு நிதியை வாங்கி எனது கல்லூரிப் பகுதியை மேம்படுத்தி பயன்படுத்திக் கொண்டேன்.  அவர்களின் ஆசியால்தான் அங்கு பாதைகள் இப்போது பளிச்சிடுகின்றன.

கடந்த ஐந்தாண்டுகள் காமராஜர் பிறந்தநாளை ஓஹோவென்று நடத்தினேன். அன்றைய ஆளுங்கட்சியின்  வி.வி.ஐ.பி.க்களே அதில் கலந்துகொள்வார்கள்.அந்த விழாவிலும் கதர்களை நான் கண்டுகொள்வதில்லை.  நான் அந்த விழாக்களை காமராஜர் மீது உள்ள பற்றுதலால் எடுக்கவில்லை.

அதனால்தான் இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாளை என்னால் கண்டுகொள்ளாமல் இருக்க முடிந்தது. அதேபோல் கட்சியிலிருந்து பதவிகளுக்கு ஆட்களை நியமித்தால் போட்டிப் பதவிகளைப் போட்டுக் கு ழப்புவதில் எனக்கு தனி சுகம்.

சுயநிதிப் பள்ளிகளாகத் துவங்கப்பட்ட நூற்றுக்கணக்கான சுயநிதிப் பள்ளிகளுக்கு அரசு உதவி கிடைக்க  ஏற்பாடு செய்தேன். அதில் சுமார் இரண்டாயிரம் ஆசிரியர் பணிகளுக்கு அரசு சம்பளம் தரும் என்பதை  எடுத்துக்கூறி, கோடிக்கணக்கில் வசூல் செய்தேன். அதில் கொஞ்சம் அன்றைய ஆட்சியாளர்களுக்குக்  கொடுத்தேன். ஆனாலும், பிறப்பிக்கப்பட்ட அரசாணை பயனில்லாமல் கிடக்கிறது.அதுகுறித்துக் கேட்கும்  பள்ளிகளின் தாளாளர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

எனக்கு வருமானம் பெருகியதால் ஐயாவுக்கு ஆதரவாகப் பேசி எங்கள் கட்சியையே நான் அசிங்கப்படுத் துவேன். எங்கள் தலைமையின் மரணத்தை கெட்ட கனவாக மறந்துவிடவேண்டும். கூட்டணித் தலைமைக்கு  கட்டுப்பட வேண்டும் என்பதாக நான் பேசியது பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.

அதேபோல் எங்கள் கட்சியின் நைனா உட்பட சிலருக்கு முடிவுரை எழுதிய மந்திரத்தின் பெயர் கொண்ட பெண்ணுக்கு முன்னுரை எழுதியவன் நான். அவரோடு என்னை வெளிநாடு அனுப்பி வைத்தார் ஐயா.  இதற்காக எகிறிக் குதித்தார் கிருஷ்ணன் தவழ்ந்த பெயர் கொண்டவர். சபையின் நாயகரிடமும் சலசலப்பு  கேட்டது. அதில் தலைமையை கைகாட்டிவிட்டு தப்பித்துக்கொண்டார் நாயகர். மேலிடத்து அனுமதியின்றி  அந்தப் பயணம் அமைந்ததாக அப்போது எழுந்த சர்ச்சை இன்றுவரை ஓயவில்லை.

இந்த முறை எனக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்று கடினமாகவே இருந்தது. கட்சிக்கு நான் விசுவாசமாக  இல்லை என்றும், ஏற்கெனவே பதவிகளை அனுபவித்துவிட்டேன் என்றும் கூறி தடுத்தனர். ஆனாலும்,  கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதால் அந்த சந்தர்ப்பம் எனக்குச் சாதகமானது. ஆனாலும், தோல்வியைத்  தவிர்க்க முடியவில்லை.

எனவேதான் இந்த ஓய்வு கிடைத்திருக்கிறது. பழைய கூட்டணிக்காரர்கள் எல்லாம் சோர்ந்து போயிருக்க,  புதிய கூட்டணி உருவாகுமா என்று எதிர்பார்க்கிறேன். அப்படி உருவானால் அம்மாவின் காதில் கேட்கும்  முதல் ‘வாழ்க’ சத்தம் என்னுடையதாகத்தான் இருக்கும்.’

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Add Comment