`1001 கண்டுபிடிப்புகள்’ குறும்படம் 9 சர்வதேச விருதுகளை பெற்று சாதனை

முஸ்லிம்களின் பாரம்பரியங்கள் தொடர்பாக விஞ்ஞான ரீதியாக எடுக்கப்பட்ட குறுந்திரைப்படமான `1001 கண்டுபிடப்புகள்’ ஒன்பது விருதுகளை வென்றுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற 53 ஆவது சர்வதேச தொலைக்காட்சி மற்றும் பட விருது விழாவிலேயே இப்படத்திற்கு 9 விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேற்படி விருதுகளில் மிகச் சிறந்த படத்துக்கான விருதும் கிடைக்கப் பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அப்துல் லதீப் ஜெமீல் பவுன்டேஷனின் அனுசரணையில் தயாரித்து வெளியிட்டுள்ள முஸ்லிம் பாரம்பரியங்கள் தொடர்பான இப்படமானது 13 நிமிடங்களைக் கொண்டதுடன் ஐந்து தங்க பதக்கங்கள் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் ஏற்கனவே வென்றுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த படத் தயாரிப்பாளர் பேராசிரியர் சாலிம் அல் ஹசனி,

முஸ்லிம்களின் கலாசார மற்றும் பாரம்பரியங்களை சர்வதேசஅங்கீகாரம் கிடைத்ததற்கு இது ஒரு ஆதாரமாகும். மேலும் இவ்வாறான விருதுகள் மூலம் முஸ்லிம்கள் தொடர்பான படங்களைத் தயாரிக்க முற்படும் ஏனைய தயாரிப்பாளர்களும் உட்சாகமடைந்துள்ளனர். தமது எதிர்கால இலக்கு ஏனைய கலாசார மற்றும் பாரம்பரியங்களுக்கிடையில் முஸ்லிம்களின் தனித்துவமான பாரம்பரிய விழுமியங்களை அறிமுகப்படுத்தி புரிந்துணர்வுப் பாலம் அமைப்பதாகும் என்றார்.

ஜெமீல் பவுன்டேஷனின் அனுசரணையோடு Buy Lasix `எட்ஜ்’ படத் தயாரிப்பு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட மேற்படிப் படமானது 2010 ஜனவரி மாதம் லண்டன் விஞ்ஞான நூதன சாலையில் இடம்பெற்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Add Comment