சீனா, பாகிஸ்தானில் நிலநடுக்கம்: அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவிப்பு.

பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று 5.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்தது.
இன்று காலை 5.53 மணியளவில் குவெட்டாவுக்கு தென்மேற்கே 330 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜனவரியில் பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் 7.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 2005 அக்டோபரில் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா:

சீனாவின் தென்மேற்கு பகுதியான யுனானில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 10,474 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Lasix No Prescription

Add Comment