லண்டன் வன்முறையின் கோர தாண்டவம்: 144 வருட வரலாற்று புகழ்மிக்க வர்த்தகத் தொகுதி தீக்கிரை.

லண்டன் நகரில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. லண்டனின் குரொய்டனிலுள்ள வரலாற்றுச் சின்னமாகத் திகழும் ஹவுஸ் ஒப் ரீவ்ஸ் என்ற இந்த வர்த்தகத் தொகுதி பல தலைமுறைகளைக் கண்ட 144 வருடங்கள் பழைமை வாய்ந்தது.
சிறிய நகரிலிருந்து லண்டனுக்கு அருகில் இந்த வர்த்தகத் buy Amoxil online தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கலவரம் லண்டன் முழுவதும் பரவிய நிலையில் அயலவர்களாலும் கலகக்காரர்களாலும் சூறையாடப்பட்ட நிலையில் இக் கட்டத்துக்கு தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத் தொகுதியை நடத்தும் 5 ஆவது தலைமுறை நானென உரிமையாளரான கிரஹம் ரீவ்ஸ் அதிர்ச்சி அடைந்த நிலையில் கண்கள் கலங்கியவாறு கூறியதாக ஹிந்து பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஹவுஸ் ஒப் ரீவ்ஸ் என்ற இந்த வர்த்தகத் தொகுதி 1867 இல் நிறுவப்பட்டதாகும்

Add Comment