சமச்சீர் கல்வி : தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களில் 41 பகுதிகள் நீக்கம்!

சமச்சீர் கல்வித்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் 10 நாள்களுக்குள் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் பாடபுத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

சமச்சீர் பாடப்புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதைகள், செம்மொழி வாழ்த்து, சென்னைச் சங்கமம், புதிய தலைமைச் செயலகம், உள்ளிட்ட பல பாடங்கள் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை நீக்கி மாணவர்களுக்கு வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன் இவை நீக்கப்படுகின்றன. நீக்கப்பட உள்ள 41 பகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டியும், கறுப்பு மையாலும் அழிக்கப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாட புத்தகங்களில் இந்த Lasix online மாற்றம் செய்யப்படுகிறது.

2ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தின் 5ஆம் பக்கத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழி வாழ்த்து, 73ஆம் பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாட்டு காட்சிகள், தமிழாய்வு மத்திய நிறுவனம் பகுதி ஆகியவற்றை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும்.

அது போன்று அனைத்து வகுப்புகளிலும் உள்ள செம்மொழி வாழ்த்து பகுதி நீக்கப்படுகிறது.

4ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111ஆவது பக்கத்தில் சென்னை சங்கமம் தொடர்பான தகவல்கள் நீக்கப்பட வேண்டும்.

5ஆம் வகுப்பு சமூக அறிவியல் 80ஆவது பக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் படம் உள்ளது. இதை மறைக்க வேண்டும். அதே புத்தகத்தில் 86ஆவது பக்கத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற தொடரை அழிக்க வேண்டும். மேலும், அதே புத்தகத்தில் 114ஆவது பக்கத்தில் புதிய தலைமை செயலகம்-2010 மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் ஓமந்தூரார் தோட்டத்தில் இயங்கி வருகிறது என்ற பகுதியை அழிக்க வேண்டும். 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111ஆவது பக்கத்தில் தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த பகுதியை நீக்க வேண்டும். அதே புத்தகத்தில் 112ஆவது பக்கத்தில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற சொல் நிரந்தர கருப்பு மையால் அழிக்கப்பட வேண்டும். அதே புத்தகத்தில் 277ஆவது பக்கத்தில் தமிழக அரசின் அவசர கால சேவை 108 என்ற பகுதியை மறைக்க வேண்டும்.

9ஆம் வகுப்பு தமிழ்ப் பாட புத்தகத்தில் தமிழ் புத்தாண்டின் தொடர்கதை தொடரை நீக்க வேண்டும்.

10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 89-ம் பக்கத்தில் உள்ள கருணாநிதி எழுதிய கவிதை பகுதி நீக்கப்பட வேண்டும்.

10ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் 239-வது பக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு நடுவர் நிறுவனத்தின் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது என்ற வாசகத்தை கருப்பு மை கொண்டு அழிக்க வேண்டும்.

10ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் 100ஆவது பக்கத்தில் “கலைஞரின் இனிய நடை படித்தறிக கொடிநாள்” என்ற பகுதி மறைக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட திருத்தங்கள் உள்ளிட்ட 41 பகுதிகள் சமச்சீர் பாட புத்தகத்தில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ள

Add Comment