போதையில் அரசு டாக்டர் நிர்வாண நடனம்! செவிலியர்கள் ஓட்டம்

மதுரை: அரசு பொது மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் குடிபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, நிர்வாண நடனமாடியதால் நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவான 5வது வார்டுக்கு முதலுதவி சிகிச்சை வார்டில் நேற்று முன்தினம் இரவு நோயாளிகள் அதிகம் வரவில்லை. இதனால் பணியிலிருந்த டாக்டர் மது  அருந்தியுள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில், அணிந்திருந்த பேண்ட், சட்டையை கழற்றி லுங்கி அணிந்து கொண்டார். இங்கு தினமும் அதிகாலையில் நாய்க் கடிக்கு ஊசி போடுவதற்காக வருவது வழக்கம். நேற்று அதிகாலையிலேயே ஏராளமான நோயாளிகள் நாய் கடி தடுப்பு  ஊசி போடுவதற்காக வந்தனர்.

ஆனால், உச்சகட்ட போதையில் இருந்த மருத்துவர்  வந்திருந்த நோயாளிகளுக்கு ஊசி போடவில்லை. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. நோயாளிகள் வந்திருப்பது குறித்து செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மருத்துவரிடம் தெரிவித்தனர். ஏற்கனவே போதையில் இருந்த டாக்டர், யாருக்கும் சிகிச்சை செய்ய முடியாது. எனக்கூறி, செவிலியர் மற்றும் பணியாளர்களை ஆபாசமாக பேசிய மருத்துவர் அணிந்திருந்த லுங்கி நழுவி கீழே விழுந்தது.

இதை கண்ட செவிலியர்கள், நோயாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமானுஜம், நிலைய மருத்துவ அதிகாரிகள் திருவாய்மொழி பெருமாள், பிரகதீஸ்வரன் ஆகியோர் அந்தப் பிரிவுக்கு விரைந்து வந்தனர்.

உயர் அதிகாரிகள் வருவதை பார்த்ததும், போதையிலிருந்த  மருத்துவர் அங்கிருந்த அறைக்குள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதற்கிடையே, ‘இந்த மருத்துவர் பணியில் இருந்தால், நாங்கள் இங்கு பணிபுரிய மாட்டோம்‘ என செவிலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, உடனடியாக அங்கு மாற்று மருத்துவரை நியமித்த மருத்துவமனை கண்காணிப்பாளர் இந்த மருத்துவர் ஏற்கனவே சில தினங்களுக்கு முன் Buy Cialis Online No Prescription இதேபோல குடிபோதையில் ரகளை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை அதிகாரிகள் முடிவு செய்து 3 பேர் கொண்ட மருத்துவ குழுவை நியமித்துள்ளனர்.

Add Comment