ப.சி. விலகக் கோரி நாடாளுமன்றத்தில் அமளி

டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை பாஜக இளைஞர் அணியினர் நடத்திய பேரணி மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் விலக வேண்டும் என்று தேசிய ஜனாயகக் கூட்டணி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை அலுவல்கள் முடங்கின.

புதன்கிழமை காலையில் மக்களவை கூடியதும் முன்னாள் உறுப்பினர் சாந்திலால் புருஷோத்தம்தாஸ் படேலின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்குவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

அப்போது, Buy cheap Amoxil டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக இளைஞர் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கும் புணேயில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கும் கண்டனம் தெரிவித்து பாஜக, சிவ சேனை உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டபடி அவையின் மையப் பகுதிக்கு வந்தனர்.

பாஜகவினர் மீது நடந்த தாக்குதலுக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். புணே சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்ததாக அவர்கள் புகார் கூறினர். இதனால் மக்களவையில் அமளி ஏற்பட்டது

Add Comment