விரைவில் நாள் குறிக்கப்படும்: கருணாநிதி கவிதை!

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கவிதை:

கற்கண்டு தமிழ்க் கவிதைகள் கசக்குதென்று
அவற்றின் மீது கரி பூசி மறைக்கும்
கர்த்தப அறிவுடையோர்க்கு சம்மட்டி அடி
கொடுத்தது போல் வந்தது தீர்ப்பு!

தமிழர்களின் தொடர்ந்து வரும் தூய வரலாற்றினை
தடுத்து நிறுத்தலாம் என்ற
தீய எண்ணத்தோடு
பக்கங்களைக் கிழிக்கும் பாவிகளே!

‘‘பளார்’’, ‘‘பளார்’’ Ampicillin online என உங்கள்
கன்னங்களில் அறைவது போல்,
வந்துள்ள நெருப்புத் தீர்ப்பை
பஞ்சுப் பொதிகளால் அணைக்கலாம் என்று
பகற் கனவு காணாதீர்!

இளம் அம்புலிக்கீற்றாக
இன்றெமக்குக் கிடைத்த வெற்றி&
தங்க ஒளி நிலவாக&தகத்தகாய கதிராக&
மாறப் போகும் காலம்&நீங்கள்
மறைக்கப் பார்க்கும் திற ÔÔமைÕÕ யினால்
அழிவதில்லை&அழிவதில்லை!

அதனை உணர்வீர் இன்றே& என்று
இளைய தலைமுறை எக்காள முழக்கமிடுவோம்&
எல்லோரும் வாருங்கள் என்று அழைக்கின்ற
தன்மான அணிக்கு தவறாமல் வந்திடுவீர்!

விரைவில் நாள் குறிக்கப்படும்! விரிவுரையாற்றுவோர் பெயர்களும் அறிவிக்கப்படும்!!

thk by 

dinakaran

Add Comment