திருநெல்வேலி மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி கடையநல்லூர் ஆணழகன் நேஷனல் ஜிம் முகம்மது இபுராஹீம் 2-வது இடம்

விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற திருநெல்வேலி மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் பாளையங்கோட்டை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

விக்கிரமசிங்கபுரம் மாஸ்டர் ஜிம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், தென்காசி, வள்ளியூர், திருநெல்வேலி, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வீரர்கள் கலந்துகொண்டனர்.

போட்டிக்கு பாபநாசபாண்டியன் தலைமை வகித்தார். போட்டியில் வென்றவர்கள் விவரம்:

50 கிலோ எடை பிரிவில் இசக்கிமுத்து முதலிடம், வடிவேல் 2-வது இடம், 55 கிலோ எடை பிரிவில் ராஜேஷ் முதலிடம், சங்கர் 2- வது இடம், 60 கிலோ எடை பிரிவில் ஜெகன் முதலிடம், தங்கமாரியப்பன் 2- வது இடம், 65 கிலோ எடை பிரிவில் யாசர்அராபத் முதலிடம், ஆண்டனிகிங்ஸ்லி 2- வது இடம், 70 கிலோ எடை பிரிவில் சுடலைமுத்து முதலிடம், விக்னேஷ்வரன் 2- வது இடமும் பெற்றனர்.

75 கிலோ எடை பிரிவில் முகம்மதுஷேக் முதலிடம், சண்முகசுந்தரம் 2- வது இடம், 80 கிலோ எடை பிரிவில் செல்வகுமார் முதலிடம், குமார் 2- வது இடம், 85 கிலோ எடை பிரிவில் வால்டர் முதலிடம், ஜான்தாஸ் 2- வது இடம், 85 கிலோவுக்கு அதிகமான பிரிவில் மாசானமுத்து முதலிடம், முகம்மதுஇபுராஹீம் 2-வது இடமும் பெற்றனர்.

மேலும், Buy Lasix பாளையங்கோட்டை பவர் ஜிம் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டியில் வென்றவர்களுக்கு காவல் நிலைய ஆய்வாளர் கே. ராதாகிருஷ்ணன், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் கே. முருகன், முன்னாள் ஒலிம்பிக் வீரர் சிவராஜ், முன்னாள் ஆசிய விளையாட்டு வீரர் மாடசாமி, வழக்குரைஞர்கள் வள்ளுவராஜ், கணேசபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டியின் நடுவர்களாக அயன்போஸ், சந்திரபாண்டியன், சரவணசுப்பையா, முத்தையா, நேவிஸ் ஆகியோர் செயல்பட்டனர். மாஸ்டர் ஜிம் பொறுப்பாளர் பா. வடிவேல் நன்றி கூறினார்.

Add Comment