ராஜ்யசபா தேர்தல் : பஸ்வான் – விஜய்மல்லையா வெற்றி

Bactrim No Prescription justify;”>ராஜ்யசபா உறுப்பினர்கள் 18 பேர் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடந்தது. இதில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, பா.ஜ.,வை சேர்ந்த வெங்கையாநாயுடு, விஜய்மல்லையா, ராம்ஜெத்மலானி முக்கியஸ்தர்கள். ராஜஸ்தான் ( 4 சீட்) , பீகார்( 5 சீட்) , கர்நாடகா( 4 சீட்) , ஒரிசா( 3 சீட்) , ஜார்கண்ட் ( 2 சீட்) , 5 மாநிலங்களில் இந்த தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட பீகாரை சேர்ந்த லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ்பிரதாப்ரூடி, ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா வெற்றி பெற்றுள்ளார். முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியிடப்பட்டு விடும். குதிரை பேரம் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் முடிவு என்னவாகும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் தி.மு.க., சார்பில், செல்வகணபதி, தங்கவேல், கே.பி.,ராமலிங்கம் ஆகியோரும், அ.தி.மு.க., சார்பில் மனோஜ்தங்கபாண்டியன், ராமலிங்கம் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

Add Comment