பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்கும் கருவியா? பசை போன்ற ஒரு பொருள், சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாம்.

“நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில், ஒட்டுக் கேட்கும் கருவி online pharmacy without prescription எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் நேற்று, நிதித் துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம், எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது:
கடந்தாண்டு செப்., 4ல், நிதி அமைச்சர் பிரணாபின் அலுவலகத்தில், நேர்முக வரித் துறை அதிகாரிகள் நடத்திய வழக்கமான சோதனையின் போது, பசை போன்ற ஒரு பொருள், சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ரகசிய விசாரணை நடத்தும்படி, புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். அப்போது, அலுவலகத்தில் இருந்த பசை போன்ற பொருள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்தப் பொருள், சூயிங்கம் போல் இருந்ததாக தெரியவந்தது. இதற்கு பின், அலுவலகத்தின் அனைத்து பகுதிகளும், முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், ஒட்டுக் கேட்கும் கருவி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறு பழனி மாணிக்கம் கூறினார்.

Add Comment