ஜாமீன் கிடைத்த செய்தியை கேட்டவுடன் கோர்ட்டில் ஹசன் அலி மயங்கி விழுந்தார்

குதிரைப்பண்ணை அதிபர் ஹசன் அலி, தனக்கு ஜாமீன் கிடைத்த செய்தியை கேட்டவுடன் கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மராட்டிய மாநிலம் புனே நகரை சேர்ந்த குதிரைப்பண்ணை அதிபர் ஹசன் அலிகான், பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அமலாக்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வெவ்வேறு நகரங்களில் வாங்கிய 6 பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பதால், பாஸ்போர்ட் சட்டப்படியும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

ஹசன் அலி, சட்டவிரோத பண பரிமாற்ற சட்டப்படி தொடரப்பட்ட வழக்கில், தன்னை ஜாமீனில் விட வேண்டும் என்று கோரி, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஜாமீன் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ஹசன் அலிகானுக்கு ஜாமீன் அளித்தனர். கோர்ட்டின் அனுமதி பெறாமல் அவர் வெளிநாடு செல்லக்கூடாது Buy Ampicillin என்று நிபந்தனை விதித்தனர்.

இதற்கிடையே, காவல் நீட்டிப்புக்காக நேற்று மும்பை செசன்சு கோர்ட்டுக்கு ஹசன் அலி கொண்டு வரப்பட்டிருந்தார். ஜாமீன் கிடைத்த தகவல் அவரிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டவுடன் அவர் கோர்ட்டு வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மும்பை செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஹசன் அலி மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது சர்க்கரை அளவு கணிசமாக குறைந்து விட்டதாகவும் அவருடைய வக்கீல் பகாரியா தெரிவித்தார்.

Add Comment