கணவருடன் செல்லமாட்டேன் காதலன்தான் வேண்டும்; புதுப்பெண் பிடிவாதம்

 

மதுராந்தகம் அருகே உள்ள ஜமீன் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகள் சரண்யா (25). இவருக்கும் சென்னை அம்பத்தூரை சேர்ந்த சுரேஷ்குமார் (26). என்பவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன்  மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு சரண்யா தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரண்யா Bactrim online மாயமானார். இது குறித்து கிருஷ்ணசாமி சித்தாமூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் சரண்யாவை தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த ராமச்சந்திரன் அவரது நண்பர்கள் முகுந்தன், ரவிக்குமார் ஆகியோருடன் சேர்ந்து கடத்திச் சென்று விட்டார் என்று கூறியிருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தாங்கள் தேடப்படுவதை அறிந்த முகுந்தனும் ரவிக் குமாரும் சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி மதுராந்தகம் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றனர்.   அவர்கள் உதவியுடன் மதுராந்தகத்தில் வைத்து சரண்யா மீட்கப்பட்டார். அவரை கடத்தி சென்ற ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் திருமணத்துக்கு முன்பு சரண்யா ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு இன்டர்வியுக்கு வந்த ராமச்சந்திரனை சந்தித்தார். இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். இந்த பழக்கம் காதலாக மாறியது.

இந்த நிலையில் சரண்யாவுக்கு பெற்றோர்கள் சுரேஷ் குமாருடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பிறகும் ராமச்சந்திரனுடன் சரண்யாவுக்கு தொடர்பு நீடித்தது. இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த சரண்யா காதலனுடன் சென்று விட்டார்.

போலீசாரால் மீட்கப்பட்ட பிறகும் தந்தையுடன் செல்ல சரண்யா மறுத்து விட்டார். தந்தையுடன் சென்றால் கணவருடன் வாழச் சொல்லி வற்புறுத்துவார். எனக்கு கணவர் வேண்டாம். காதலனுடன் தான் செல்வேன். இல்லையேல் தனியாக வாழ்வேன் என்று போலீசாரிடம் பிடிவாதமாக கூறிவிட்டார். இதையடுத்து சரண்யாவை மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.

Add Comment