தி.மு.க.,வுக்கு அடுத்த வரவு அழகு திருநாவுக்கரசு

முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் அ.தி.மு.க.,விலிருந்து online pharmacy without prescription விலகி, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் இன்று இணைந்தனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, முத்துசாமி, சின்னசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு இடம் பெற்றுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றியவர் அழகு திருநாவுக்கரசு. கடந்த 1996ம் ஆண்டில் அ.தி.மு.க.,விலிருந்து வெளியேறி போட்டி அ.தி.மு.க.,வில் இணைந்தார். பின், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார். ஆனால், அவருக்கு கட்சியில் எந்தப் பதவியும் ஜெயலலிதா வழங்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக கட்சியை விட்டு ஒதுங்கியிருந்த அவர், இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தார். முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அழகு திருநாவுக்கரசு, தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம் (வேதாரண்யம்), மூர்த்தி (சீர்காழி), தங்கமணி (மயிலாடுதுறை) மற்றும் சிலர், உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, தி.மு.க.,வில் இணைந்தனர்.

Add Comment