மண்சரிவு : 30 பேர் பலி; வீடுகள் தரைமட்டம்

பங்களாதேஷில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 30 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பலர் காணாமல் போயுள்ளனர். ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டு போயுள்ளன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொக்ஸ் பஸார் எனுமிடத்தில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பண்டர்பான் மாவட்டத்துக்கு அருகில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் தொடர் மழையால் மீட்புப் பணிகள் தாமதமடைவதாகக் கூறப்படுகின்றது.

தென் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை வேளை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

“பொலிஸ், பொது மக்கள் இணைந்து இதுவரை 26 உடலங்களை நீண்ட நேரத்துக்குப் பின் மீட்டெடுத்துள்ளனர்” எனக் கொக்ஸ் பஸார் பொலிஸ் உயரதிகாரி நிப்ஹாஸ் சந்ரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐந்து இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பலத்த மழையே இதற்குக் காரணம். இந்தப் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது” என்றார்.

பங்களாதேஷில் மழைக்காலங்களின் போது இத்தகைய மண்சரிவுகள் ஏற்படுவது வழக்கம் என்றும் கூறப்படுகின்றது. Cialis online நாட்டில் 200க்கும் மேற்பட்ட ஆறுகள் ஓடுவதால், அடிக்கடி வெள்ள பாதிப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment