விருதுநகர் பட்டாசு ஆலையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு !

Buy Levitra Online No Prescription src=”http://www.seithy.com/siteadmin/upload/viruthunakar150811_1580.gif” alt=”” width=”150″ height=”139″ align=”left” border=”0″ />பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரன்(48). இவர் சாத்தூர் நான்கு வழிச்சாலையில் ஆவுடையாபுரத்தில் பட்டாசு ஆலை நடத்துகிறார். ஆலையை சந்திரனின் மூத்த சகோதரர் வீராச்சாமி(55) கவனித்து வந்தார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இங்கு மத்தாப்பு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. நேற்றுமுன்தினம் 7 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். காலை 10.50 மணியளவில் மத்தாப்பு பெட்டிகளை தூக்கி வைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதில், வீராச்சாமி(50) ஆவுடையாபுரம் ராபித் பீவி(55), சுவைதா பீவி(52) பையத்துல் பீவி (58) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களில் ராபித் பீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சுவைதா பீவி, பையத்துல் பீவி மற்றும் வீராச்சாமி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Add Comment